வாழ்வில் நம்பிக்கை அற்று உழலும் எனக்கு நம்பிக்கை அளிக்க.. அஞ்சேல் எனக் கூறி வா முருகா..ஒளியின் வேகத்தை மிஞ்சிய வேலை உடையவன் (அறிவியல் ஆச்சரியங்கள் நிகழும் தத்துவம்)
அறிவு ஆகம் பெருக... இடர் தொலைய
சிவன் மனதை குளிர்வித்தவன்.. சிவகாமி புதல்வன் ..ராமன் கிருஷ்ணன் மருமகன்..உலகில் மெய் ஞானம் பரவச் செய்தவன். வள்ளியம்மை தேவசேனா மணாளன் உண்மையான வித்தைகளின் கருவாகவும் .. அதன் விளைவாகவும் இருப்பவன்.. நவநீதம்.. நவலோகம்.. அறிவு..ஆகம். (உடல்,மனம்)... (ஆக்கம் பெருக)
இருசெவி... வள்ளியம்மை தேவசேனா
ஆகம் என்றால் உடல்.. மனம் என்று பொருள். ஆகம் ...ஆக்கம்.. ஆக்கமம் ... என்ற சொல்லில் இருந்து ஆகமம் என்ற சொல் உருவாகிறது. ஆகமம் என்றால் உயிர் சிவத்தோடு ஒன்றி நிறைவு பெறுதல் என்று பொருள்.
அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
சிவனார் மனங்குளிர (பழநி)
பழநியப்பா!
உனது அருளின் திறத்தை எண்ணாது,
அவமாயை கொண்டு உழலும் அடியேனை,
அஞ்சேல் என்று அருளி,
அருள் ஞான இன்பம் தந்து ஆண்டு கொள்வாய்.
தனனா தனந்ததன தனனா தனந்ததன
தனனா தனந்ததன ...... தனதான
சிவனார் மனங்குளிர உபதேச மந்த்ரமிரு
செவிமீதி லும்பகர்செய் ...... குருநாதா
சிவகாம சுந்தரிதன் வரபால கந்தநின
செயலேவி ரும்பியுளம் ...... நினையாமல்
அவமாயை கொண்டுலகில் விருதாவ லைந்துழலு
மடியேனை அஞ்சலென ...... வரவேணும்
அறிவாக மும்பெருக இடரான துந்தொலைய
அருள்ஞான இன்பமது ...... புரிவாயே
நவநீத முந்திருடி உரலோடெ யொன்றுமரி
ரகுராமர் சிந்தைமகிழ் ...... மருகோனே
நவலோக முங்கைதொழு நிசதேவ லங்கிருத
நலமான விஞ்சைகரு ...... விளைகோவே
தெவயானை யங்குறமின் மணவாள சம்ப்ரமுறு
திறல்வீர மிஞ்சுகதிர் ...... வடிவேலா
திருவாவி னன்குடியில் வருவேள்ச வுந்தரிக
செகமேல்மெய் கண்டவிறல் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
சிவனார் மனம் குளிர உபதேச மந்த்ரம் இரு
செவி மீதிலும் பகர் செய் ...... குருநாதா!
சிவகாம சுந்தரி தன் வரபால! கந்த! நின
செயலே விரும்பி உளம் ...... நினையாமல்,
அவமாயை கொண்டு, உலகில் விருதா அலைந்து உழலும்
அடியேனை அஞ்சல் என ...... வரவேணும்.
அறிவு ஆகமும் பெருக, இடர் ஆனதும் தொலைய
அருள்ஞான இன்பம் அது ...... புரிவாயே.
நவநீதமும் திருடி உரலோடெ ஒன்றும், அரி
ரகுராமர் சிந்தைமகிழ் ...... மருகோனே!
நவலோகமும் கைதொழு நிசதேவ! அலங்கிருத
நலமான விஞ்சை கரு ...... விளைகோவே!
தெவயானை அம் குறமின் மணவாள! சம்ப்ரம் உறு
திறல்வீர! மிஞ்சு கதிர் ...... வடிவேலா!
திருவாவினன் குடியில் வருவேள்! சவுந்தரிக!
செகமேல் மெய் கண்ட விறல் ...... பெருமாளே.