கோவையில் தற்போது ஏராளமான ஐ.டி. கம்பெனிகள் தொடங்கப்படுகின்றன. ஆனால் அவற்றுக்கு ஐ.டி. பார்க்குகளில் இடம் கிடைக்காமல் திணறி வருகின்றன. ஐ.டி. கம்பெனிக்கும், ஐ.டி. பார்க்குக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. ஒரு இடத்தில் ஒரேயொரு ஐ.டி. கம்பெனி மட்டும் செயல்பட்டால் அந்த நிறுவனமே அனைத்து வசதிகளையும் செய்து கொள்ள வேண்டும். ஆனால் ஒரு இடத்தில் பல ஐ.டி. கம்பெனிகள் செயல்பட்டால் அந்த வளாகத்துக்கு ஐ.டி. பார்க் என்று பெயர்.
தற்போது ஐ.டி. பார்க்கில் இடம் கிடைப்பது தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. ஐ.டி. கம்பெனிகளுக்கு 24 மணி நேர மின்சார சப்ளை, தடையில்லாத அதிவேக இணைய தள வசதி முக்கியம். சாப்ட்வேர் என்ஜினீயர்கள் பணிபுரிவதற்கான இடவசதி உள்பட பல கட்டமைப்புகள் அவசியம். ஆனால் இத்தகைய வசதிகளை ஐ.டி. பார்க்குகள் தான் ஏற்படுத்தி கொடுக்கின்றன. இது பற்றிய ஒரு வீடியோ தொகுப்பை காணலாம்.#கோயம்புத்தூர் #Coimbatore #itparks #tidelpark #itcompanies #workspace #job