MENU

Fun & Interesting

திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் உருவான வரலாறு | திருக்கோளூர் வைத்தமாநிதிப் பெருமாள் திருக்கோவில் |

மகா தமிழ் 210 lượt xem 4 years ago
Video Not Working? Fix It Now

திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம், திருக்கோளூர்ப் பெண்பிள்ளை ரகசியங்கள்" அடியார் ஆசாரியருக்குக் கூறியது. திருக்கோளூர் வைத்த மாநிதிப் பெருமானை தரிசிக்க எம்பெருமான் இராமானுஜர் சென்ற போது தம் எதிரில் வந்த வைணவப் பெண்பிள்ளை (திருமாலடியார்) திருக்கோளூர் விட்டு நீங்கிச் செல்வது கண்டு காரணம் கேட்டார். அதற்கு எண்பத்தொரு வைணவப் பெரியவர்களின் தன்மைகளைக் கூறி அத்தகைய செயல்கள் எதையும் தாம் செய்யவில்லையே என்று வருந்தினார் அந்த மாதரசி. அப்போது அடுக்கிக் கூறிய தொடர்களின் களஞ்சியமே ’திருக்கோளூர்ப் பெண்பிள்ளை ரகசியங்கள்’

1. அழைத்து வருகின்றேன் என்றேனோ

அக்ரூரரைப் போலே
2. அகம் ஒழித்து விட்டேனோ

விதுரரைப் போலே
3. தேகத்தை விட்டேனோ

ரிஷி பத்தினியைப் போலே
4. தசமுகனைக் செற்றேனோ

பிராட்டியைப் போலே
5. பிணம் எழுப்பி விட்டேனோ

தொண்டைமானைப் போலே
6. பிணவிருந்து இட்டேனோ

கண்டாகர்ணனைப் போலே
7. தாய்க்கோலம் செய்தேனோ

அநுசூயைப் போலே
8. தந்தை எங்கே என்றேனோ

துருவனைப் போலே
9. மூன்றெழுத்து சொன்னேனோ

கந்திரபந்துவைப் போலே
10. முதல் அடியைப் பெற்றேனோ

அகலிகையைப் போலே
11. பிஞ்சாய்ப் பழுத்தேனோ

ஆண்டாளைப் போலே

Comment