தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்கள்
மாற்றுரைவரதீஸ்வரர் கோவில் திருவாசி (62/274)
தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 62வது தலம்.
மூலவர் : மாற்றுரைவரதர் (பிரம்மபுரீஸ்வரர், சமீவனேஸ்வரர்)
அம்மன்/தாயார் : பாலாம்பிகை
தல விருட்சம் : வன்னி
தீர்த்தம் : அன்னமாம்பொய்கை, சிலம்பாறு
புராண பெயர் : திருப்பாச்சிலாச்சிரமம்
ஊர் : திருவாசி
மாவட்டம் : திருச்சி
பாடியவர்கள்:
திருஞானசம்பந்தர், சுந்தரர்
தேவாரப்பதிகம்
ஒருமையே அல்லேன் எழுமையும் அடியேன் அடியவர்க்கு அடியனும் ஆனேன் உரிமையால் உரியோன் உள்ளமும் உருகும் ஒண்மலர்ச் சேவடி காட்டாய் அருமையாம் புகழார்க்கு அருள்செய்யும் பாச்சி லாச்சிராமத்து எம் அடிகள் பெருமைகள் பேசிச் சிறுமைகள் செய்யில் இவரலாது இல்லையோ பிரானார்.
-சுந்தரர்
திருவிழா:
வைகாசியில் 11 நாட்கள் பிரம்மோற்ஸவம், திருக்கார்த்திகை, ஆருத்ரா தரிசனம், தைப்பூசம்.
தல வரலாறு
இப்பகுதியை ஆண்டு வந்த கொல்லிமழவனின் மகளுக்கு முயலகன் (வலிப்பு நோய்) எனும் தீராத நோயிருந்தது. மன்னன் எவ்வளவோ வைத்தியம் செய்து பார்த்தும் மகளை குணப்படுத்த முடியவில்லை. எனவே, பெரியவர்களின் ஆலோசனைப்படி, பெருமான் அருள் புரியும் கோயிலில் அவளைக் கிடத்தி, அவள் பிணியை குணப்படுத்தும் பொறுப்பை பெருமானிடமே விட்டுவிட்டுச் சென்றான்.
அச்சமயத்தில் திருஞானசம்பந்தர் பல தலங்களை தரிசனம் செய்து கொண்டு மழவ நாட்டைச் சார்ந்த திருப்பாச்சிலாச்சிராமம் என்ற இத்தலத்திற்கு எழுந்தருளினார். இதையறிந்த மன்னன் அன்புடன் சம்பந்தரை வரவேற்றுத் தன் மகளின் நோயை நீக்கியருள வேண்டினான். அருள் உள்ளம் கொண்ட சம்பந்தர் சிவனை வேண்டி துணிவளர் திங்கள் துளங்கி விளங்க எனும் பதிகம் பாடி இறைவனை வணங்க நோய் நீங்கி மன்னன் மகள் குணமடைந்தாள்.
சிவபெருமான் அவளது நோயை ஒரு பாம்பாக மாற்றி, அதன் மீது நின்று ஆடினார். இதன் அடிப்படையில் இங்குள்ள நடராஜர் காலுக்கு கீழே முயலகன் உருவம் இல்லாமை அறியத்தக்கது. திருவடியின் கீழ் அதற்குப்பதில் ஒரு உள்ள சர்ப்பத்தின் மீது நடனமாடுகின்றார்.
பிராத்தனை
நரம்புத் தளர்ச்சி, வாதநோய், வலிப்பு நோய், சர்ப்ப தோஷம், மாதவிடாய் பிரச்னைகள் முதலியன இத்தல இறைவனை வழிபட குணமாகும். இவ்வாலயத்திலுள்ள ஆவுடையாப்பிள்ளை மண்டபத்தில் கொல்லி மழவன் மகளுக்கு சம்பந்தர் நோய் நீக்கிய வரலாற்றை விளக்கும் சிற்பங்கள் உள்ளன.
தொடர்ந்து 48 நாட்கள் இத்தலத்திலுள்ள நடராசருக்கு அர்ச்சனை செய்து வந்தால் தீராத நோய்கள், வயிற்று வலி, பித்தம், வாதம் போன்ற நோய்கள் நீங்கப் பெறலாம்.
தல பெருமை
இத்தலத்தில் இறைவன் மாற்றுரைவரதீஸ்வரர் என்ற திருநாமத்துடன் எழுந்தருளியுள்ளார். இறைவன் இந்த பெயர் பெறக் காரணமாக உள்ள வரலாறு சுவையானது. இத்தலம் வந்த சுந்தரர், சிவனிடம் பொன் கேட்டார். அவரை சோதிப்பதற்காக சிவன் பொன் தரவில்லை. கோபம் கொண்ட சுந்தரர், "சிவன் இருக்கிறாரா, இல்லையா" என்ற அர்த்தத்தில் இகழ்ந்து வைத்தனன் தனக்கே தலையும் என் நாவும் என்று தோடங்கும் பதிகம் பாடினார்.
பதிகத்தின் கடைசி பாடலில் "திரு நாவலூரில் தோன்றிய நம்பியாரூரன் இவரைப் பேசிய பேச்சுக்கள், உண்மையில் ஏசினவும் அல்ல, இகழ்ந்தனவும் அல்ல, ஆதலின், அவைகளை இவர் பொறுத்துக் கொள்ளுதல் வேண்டும், அது செய்யாராயினும், அடியேனது பிழைகளைப் பொறுத்து ஆளும் தலைவர் இவரன்றி வேறொருவர் இல்லை" என்று குறிப்பிடுகிறார்.
சிறிதுநேரம் கழித்து சுந்தரருக்கு காட்சி தந்த சிவன், பொன் முடிப்பு தரவே, அந்தப் பொன் தரமானது தானா என்ற சந்தேகம் சுந்தரருக்கு வந்தது. அப்போது அங்கு வந்த இரண்டு வணிகர்கள் தங்கத்தை சோதித்துத் தருவதாகச் சொல்லி வாங்கிக் கொண்டனர். ஒருவர் பொன்னை உரைத்துப் (சோதித்து) பார்த்துவிட்டு, பொன் தரமானதுதான் என்றார்.
உடன் வந்தவரும் அதை ஆமோதித்தார். பின் இருவரும் மறைந்து விட்டனர். சுந்தரர் வியந்து நின்றபோது, சிவனே வணிகர் வடிவில் வந்து உரைத்து காட்டியதையும், மகாவிஷ்ணு அவருடன் வந்ததையும் உணர்த்தினார். தங்கத்தை உரைத்துக் காட்டியதால் சிவனுக்கு "மாற்றுரைவரதர்' என்ற பெயர் ஏற்பட்டது.
அமைவிடம்
திருச்சியில் இருந்து நாமக்கல் செல்லும் வழியில் 12 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து குனசீலம் மற்றும் வெள்ளூர் செல்லும் நகர பேருந்துகளில் பயணம் செய்து திருவாசி என்ற பெயர் பலகை உள்ள இடத்தில் இறங்கி அரை கி.மீ நடந்து சென்று இத்தலம் அடையலாம்.
திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் கோவில் Google map link
https://maps.app.goo.gl/1FJXyAUcxLJGKfju7
முயலகன் நோய் தீர்க்கும் திருஞானசம்பந்தர் அருளிய இத்தல பதிகத்தின் link
https://m.facebook.com/groups/177011132917462/permalink/878842159401019/
ஆலய தொடர்பு எண்
+91 9715064212
மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்
+91 7994347966
நடைதிறப்பு
இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
if you want to support our channel via UPI ID
nava2904@kvb
Join our channel what's app Group
https://chat.whatsapp.com/LRPxBQMNHRAGAJPNwzCB04
Join this channel to get access to perks:
https://www.youtube.com/channel/UCv4F_mJmuC7-bA9B0v20B5w/join
- தமிழ்