#sharmila #womenbusdriver #womanbusdriver #ladybusdriver #ladydriver #ridersharmila #ridergirl #maydaynews #femalebusdriver #feminism #பெண்ணியம் #தொழிலாளர் #வர்க்கம்
கடந்த ஒரு மாத காலமாக தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் பெண் ஷர்மிளா. மற்ற பெண்கள் செய்யாத சாதனை எதை செய்து விட்டார் இந்தப் பெண் பெண் பஸ் ஓட்டுவது இவ்வளவு பெரிய அதிசயமா? என்று நிறைய பேர் கேள்வி கேட்டு வருகிறார்கள். விடைதான் இல்லை. நம்மிடம் அவர்கள் கேள்விக்கெல்லாம் ஆகப்பெரும் விடை உண்டு. பொதுவாக இதுவரை சாதித்த பெண்கள் பெரும்பாலும் தான் இந்த ஆண்வர்க்கத்தை வென்றெடுக்க என்ன பாடுபட்டேன் என்று களத்தில்தான் நின்று களமாடியிருக்கிறார்கள். ஆனால் இந்தப் பெண்ணோ, ஆண் டிரைவர்கள் என்ன பாடுபடுகிறார்கள். அவர்களுக்கு ஒரு பாதுகாப்பு உண்டா? என்று ஆண்களின் பக்கம் நின்று அவர்களின் அரும்பாடுகளைப் பேசுகிறார். இதன் மூலம் ஆண்கள் மட்டுமே கோலோச்சும் பல்வேறு துறைகளில் ஆண் தொழிலாளிகள் படும்துன்பங்களை அவரையறியாமல் பேசி, அவர்களுக்காக குரல் கொடுக்கிறார். ஆண்மீது தாய்மையின் வாஞ்சையோடு பெண்ணியக்குரல் எழும்புவது அநேகமாக இதுதான் முதன் முறையாக இருக்கும். எனவேதான் சிறு வயதுப் பெண் என்பதையும் தாண்டி அவரைப் பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் கூட கொண்டாடுகிறார்கள். சகோதரியா, தன் மகளாக, பேத்தியாக, தன் தாயாகப் போற்றுகிறார்கள். 12 மணி நேர வேலை என்று தமிழகம் முழுக்க ஒரு சட்டம் அமலாகி நிறுத்தப்பட்டிருக்க, இந்த நேரத்தில் ஷர்மிளாவின் குரல் எத்தகையது. அதைத்தான் இந்தப் பதிவில் உங்களுக்காக பேசியுள்ளேன். பார்த்து, கேட்டு விட்டு கருத்தை எழுதுங்கள்.