MENU

Fun & Interesting

பால்கறக்கும் நேரடி காட்சி

Video Not Working? Fix It Now

அழுக்கான, கழுவப்படாத, நகம் வெட்டப்படாத கைகளுடன் பால் கறக்கவரும் பால் கறவையாளர் மூலம் ஒரு பசுவிலிருந்து இன்னொரு பசுவிற்கு நோய் தொற்று எளிதாகப் பரவுகின்றது. கறவை இயந்திரங்களைப் பயன்படுத்தினால் நோய் பரவுவது தவிர்க்கப்படுகின்றது. குறிப்பாக மடிநோய் எனும் மாபாதக நோய் தவிர்க்கப்படுகின்றது.

தினசரி குறிப்பிட்ட நேரத்தில் கறந்து குறித்த நேரத்தில் விற்பனைக்கு அனுப்புவது மிகவும் முக்கியம். அடிக்கடி நேரம் மாற்றி மாற்றி பால் கறப்பதால் பசு கறக்கும் பாலின் அளவு கூடிக் குறைகின்றது. பால் விற்பனைக் கணக்கீடு பாதிக்கப்படுவதுடன் பசுவிற்கும் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படும். அதிகபடியாக பால் கொடுக்கும் பசுக்கள் நேரத்தில் பால் எடுக்காமல் தாமதித்தால் பால் காம்புகளிலிருந்து அதுவாகவே பால் வெளியேறும். பால் மடி நிறைய பால் தங்கியிருப்பது பசுவிற்கு நிலைகொள்ளாமையை ஏற்படுத்தி உளைச்சலையும் ஏற்படுத்தும். தினசரி குறிப்பிட்ட நேரத்தில் பால் கறவையாளர் வருவது தவறினால் இந்த சூழல் ஏற்படும். இதற்கு ஒரே மாற்றுத் தீர்வு பால் கறவை இயந்திரங்கள்.

கைகளால் பால் கறக்கும்போது கறவையாளர்களின் கைவிரல் நகம் பட்டு பசுக்களின் மென்மையான காம்புகளில் காயம் ஏற்படுகின்றது. தினசரி இரண்டு முறை பால் காம்புகளைத் தொடவேண்டி இருப்பதால் பால் காம்புகளில் புண் ஏற்பட்டுவிட்டால் புண் ஆறுவது மிகவும் சிரமான விஷயம். இதனால் பாலுடன் காம்பிலிருக்கும் புண்களிலிருந்து வரும் ரத்தம் கலக்க நேரிடுகின்றது. வாய் அகன்ற மூடப்படாத பாத்திரங்களில் பால் கறக்கும்போது பசுவின் சீழ்ப் பகுதியில் ஒட்டியுள்ள சாணம், தூசு, ஈக்கள் போன்றவை பாலில் விழுகின்றது. ஆனால் மூடியுடன் கூடிய காற்றுப்புகாத பால்கேனின் துணை கொண்டு பால் கறக்கும்போது பாலைத் தவிர வெளிப் பொருட்கள் பாலில் கலப்பதற்கான வாய்ப்பே இல்லை.

அதிக அளவில் பால் கறக்கும் பசுக்களிலிருந்து பால் முழுவதையும் கறக்காமல் சிறிதளவு பாலை பசுவின் மடுவின் தங்கவிடுவதனால் எஞ்சிய பாலினால் மடிநோய் எனும் கொடிய நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. இறுதியாக கறக்கப்படும் பாலில்தான் கொழுப்பு, கொழுப்பு இல்லாத ஒரே திடப் பொருள் (SNF) அதிகம் உள்ளது.

இயற்க்கை விவசாயம், கால்நடைவளர்ப்போர் மட்டும் இக்குழுவில் இணையவும் இது எங்கள் அதிகாரபூர்வ வாட்ஸ்அப் குழு: https://chat.whatsapp.com/G3SXkAKOwxsLE3lBkwFeyB

Telegram டெலிகிராம்: https://t.me/joinchat/Pz978hgrt2DB1qsQIYWEHw

Our channel contact : 8807671279

Comment