தீராத நோய் தீர சூட்சம பிரார்த்தனை! வாழ்வாங்கு வாழ இப்படி ஒரு வழி இருக்கா?
ஸ்ரீ ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளின் அவதாரத் திருநாளில் சிறப்பு செய்தியாக இந்தப் பதிவு. உடலால் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக துன்பத்தில் தவித்து கொண்டிருக்கக் கூடிய நபர்கள் யாராக இருந்தாலும் சிறியவர் முதல் பெரியவர் வரை இதில் கூறப்பட்டுள்ள வழிமுறையை கையாண்டு அந்த வியாதியில் இருந்து நிச்சயம் எல்லாம் வல்ல குருவின் அருளால் விடுதலை பெறலாம். திக்கற்றோருக்கு தெய்வமாய் மந்த்ராலயத்தில் தனது மூச்சு அடக்கி ஜீவப் பிருந்தாவனப் பிரவேசம் செய்து தன்னை நாடி கேட்கும் நபர்கள் யாராக இருந்தாலும் ஜாதி மத இனம் பேதம் இன்றி ஏற்றத்தாழ்வுகள் இன்றி அனைவருக்கும் தமது அருளை வாரி வழங்கி வரும் வள்ளல் ஸ்ரீ ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள். நம்பிக்கையுடன் பக்தி செலுத்துவோம் என்றும் நலமுடன் வாழ்வோம். ஜகத் குருவே சரணம்!
#sriraghavendra
#rayaru
#mantralaya
#guru
#bakthi