திருபழநி
· தானதன தானதன தானதன தானதன
தானதன தானதன ...... தந்ததான
· கந்தனென்று சொல்ல சொல்ல வேலையுமில்லை __ அந்த
கந்தனருள் பெருவதுவே வாழ்க்கையின்
எல்லை நம் வாழ்க்கையின் எல்லை
ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்
ஆறுமுகம் ஆறுமுகம் ...... என்று, பூதி
ஆகம் அணி மாதவர்கள் பாதமலர் சூடும், அடி
யார்கள் பதமே துணையது ...... என்று,நாளும்
ஏறுமயில் வாகன! குகா! சரவணா! எனது
ஈச! என மானம் உனதெ ...... என்று மோதும்
ஏழைகள் வியாகுலம் இது ஏது என வினாவில் உனை
ஏவர் புகழ்வார், மறையும் ...... என்சொலாதோ?
நீறு படு மாழை பொரு மேனியவ! வேல! அணி
நீலமயில் வாக! உமை ...... தந்தவேளே!
நீசர்கள் தமோடு எனது தீவினை எலாம் மடிய
நீடு தனி வேல் விடும் ...... மடங்கல்வேலா!
சீறிவரு மாறு அவுணன் ஆவி உணும் ஆனை முக
தேவர் துணைவா! சிகரி ...... அண்டகூடம்
சேரும் அழகு ஆர் பழநி வாழ் குமரனே! பிரம
தேவர் வரதா! முருக! ...... தம்பிரானே