பக்திக் கொண்டேன் பாசம் கொண்டேன்
சீதாராமா
பேராசை கொண்டேன் நேசம் கொண்டேன்
ராஜா ராமா(2)
உன் தாயைக் கண்டு
ஏங்கி நின்றேன்
கோசல ராமா
உன் தந்தையைக் கண்டு
வணங்கி நின்றேன்
தசரத ராமா (2)
வைதேகி மாதா பாக்யம் செய்தவள்
ஜானகி ராமா
தம்பிக்கு என்றும் பிரியா வரம் தந்த
லக்ஷ்மண ராமா(2)
பாதுகை ஏந்திய தம்பிக்கு
நீ என்றும் பரத ராமா
மனதில் நீங்கா வாஞ்சை கொண்ட
சத்ருக்ன ராமா(2)
உன்மன ராஜ்ஜியத்தில் குடிமகன் ஆவேன் ராஜ்ய ராமா
ஓடம் ஓட்டிய குகனாக வேண்டும்
கானக ராமா(2)
உன் பாதம் தழுவும் நீராவேன் நான்
கங்கா ராமா
என்னிடம் ஒரு நாள் பழம் புசித்திடு
சபரி ராமா (2)
ஆலிங்கனம் செய்து
ஆட்கொண்டாய் நீ
அனுமந்த ராமா
உன் சேது பந்தனத்தில்
அணிலாய் மாற செய்திடு
என் ராமா (2)
பகைவனை கூட தம்பியாய்
ஏற்ற விபீஷண ராமா
அந்தக் கருணை உனக்கு என்னிடம் இல்லையோ
காத்திடுவாய் ராமா (2)
இராவண வதம் செய்து
முக்தியை தந்த ஜெய ஜெய ராமா
உன் பக்தை என்னை ஆட்கொள்ள வேண்டும் சுந்தர ராமா (2)
எவ்விதம் வருவேன் உன்னடி சேர்வேன் என்னுயிர் ராமா
அவ்வழி காட்டி அருள் தருவாயே
அனந்த ராமா(2)
அனந்த ராமா (3)