#Partnership பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்திய படை தாக்கி அழித்தது.
இதையடுத்து, பாக்., ராணுவம் நம் நாட்டின் பல பகுதிகளில் தாக்குதல் நடத்த முயன்றது. எனினும், பாகிஸ்தானின் அனைத்து முயற்சிகளையும் இந்தியா தவிடு பொடியாக்கியது.
இந்த நிலையில், பயங்கரவாதிகளுக்கு எதிரான ராணுவத்தின் ஆபரேஷன் சிந்துார் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்துள்ள, அகில இந்திய இமாம் கூட்டமைப்பின் தலைவர் உமர் அகமது இலியாசி, பயங்கரவாதிகளை ஆதரிக்கும் பாகிஸ்தான் அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.#Imam #Umar #Ahmed #Ilyasi #pakistan #india