MENU

Fun & Interesting

பித்ரு சாபத்தை நீக்கும் பரிகார தலம் - ஈசனே அருள் புரிந்த அதிசயம் | Kanchipuramtemple | Kasi | Omnama

Dinamalar 14,097 2 months ago
Video Not Working? Fix It Now

காஞ்சிபுரம் மாவட்டம் இளையனார்வேலூரில் சோளீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. மூலவர் சோளீஸ்வரர். தாயார் சுந்தராம்பாள். காஞ்சிபுரத்துக்கு தென்கிழக்கே சுமார் 20 கிமீ தொலைவில் செய்யாற்று கரையில் அமைந்துள்ளது காவாந்தண்டலம். பாலாற்றின் துணை நதியான செய்யாறு, வெறும் மண் திட்டாக இப்போது இருக்கிறது. மழை காலங்களில் மட்டுமே ஆற்றில் நீர் ஓடும். முருகன் உருவாக்கிய ஆறு என செய்யாறுக்கு பெருமை உண்டு. சேய் என்றால் முருகன் என்று பொருள் காசியப தண்டலம் என பழங்காலத்தில் அழைக்கப்பட்ட இடமே இன்று மருவி காவாந்தண்டலம் என ஆகியுள்ளது. இங்குள்ள இந்த கோயில் பித்ரு சாபத்தை நீக்கும் பரிகார தலமாக விளங்குகிறது. காசி, கயா, ராமேஸ்வரம் போன்ற இடங்களில் பரிகாரம் செய்ததற்கு இணையாக இது கருத்தப்படுகிறது. காசியபர் என்ற முனிவர் தன் தாய்- தந்தையோடு புனித யாத்திரை புறப்பட்டு ஊர் ஊராக சென்று கொண்டிருந்தார். ஒவ்வொரு கோயிலிலும் உள்ள ஈசனை வழிபட்டு சென்றார். போகும் வழியில் தாய்-தந்தை இழந்து விட்டனர். அவர்களுக்கு இறுதி சடங்கு செய்து முடித்து, அஸ்தியை எடுத்துக்கொண்டு யாத்திரையை தொடர்ந்தார் முனிவர். காசியின் கங்கையில் இதை கரைத்து விட நினைத்தார். அப்படி ஒரு நாள் காவாந்தண்டலம் வந்தார். இந்த ஊரில் ஓடும் செய்யாறு நதியின் ஆரவாரத்திலும், இயற்கை சூழலையும் கண்டு அங்கேயே அமர்ந்தார். தினமும் செய்யாறில் புனித நீராடி, ஈசனை நினைத்து தியானம் செய்தார். அதிலேயே நாட்களை கடந்தார். ஒரு நாள் ஈசன் அசரீரியாக வந்து, உன் பெற்றோர் அஸ்தியை கரைக்க காசிக்கு செல்ல வேண்டாம். இந்த செய்யாற்றிலேயே கரைத்து விடு என்றார். காசியில் கரைத்த புண்ணியம் இங்கேயே கிடைக்கும் என அருளினார். ஈசன் சொன்னபடியே முனிவரும் செய்தார். கயிலையில் இருந்து லிங்கம் எடுத்து வந்து ஸ்தாபித்தார். பூஜைகள் செய்தார். அவரை சோளீஸ்வரராக அருள் பாலித்தார். சுவாமிக்கும் அம்மனுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்துகின்றனர். பித்ரு தோஷம் நீங்க, புத்திர பாக்கியம் கிடைக்க சோளீஸ்வரரை வழிபடுகின்றனர்.# #KanchipuramTemple #PithruDoshaRemedy #SacredDestinations #EshwaraBlessings #SpiritualWonders #HinduPilgrimage #KasiTemple #DivineGrace #OmNamahShivaya #AncientTemples

Comment