MENU

Fun & Interesting

குழந்தை பேறு வரம் அளித்து கருவை காக்கும் திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை | Garbarakshambigai

Aalayam Selveer 599,813 6 years ago
Video Not Working? Fix It Now

This video is about Sri Garbarakshambigai Amman temple is situated in Thirukarukavur near Tanjavur. (அருள்மிகு கர்பகரக்க்ஷாம்பிகை சமேத முல்லைவனநாதர் திருக்கோயில்) இத்திருக்கோவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம் அருகில் திருக்கருகாவூரில் அமைந்துள்ளது. இது திருநாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் பாடல் பெற்ற திருத்தலமாகும் . இத்திருக்கோவில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரியின் தென் கரையில் அமைந்துள்ள 18ஆவது சிவத்தலமாகும். இக்கோவில் அம்பாள் கர்ப்பரட்சாம்பிகை சிறப்பு : 1. கருச்சிதைவுற்று மகப்பேறின்றி இருப்போர் இத்தலத்திற்கு வந்து வழிபட்டு மகப்பேறு அடைகின்றனர். 2. இத்தலத்தை வழிபடுவோர்க்குக் குறைப்பிரசவம் ஏற்படுவதில்லை. 3. கருவைத் தருவதும், காப்பதுமாகிய அருள் திறன் பொருந்தி அம்பாள் விளங்குகிறாள். 4. இத்தல அம்பாளுக்கு சுத்தமான நெய்யால் தீபமிட்டு, நெய்யால் அம்பாள் திருவடியில் அபிஷேகம் செய்து அந்நெய்யையுண்டால் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது. இந்த கோவிலுக்கு எப்படி செல்வது ? இத்திருக்கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசத்தில் இருந்து 6 km தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து 20 km தூரத்திலும், தஞ்சாவூரில் இருந்து 20 km தொலைவிலும் சிறப்புற அமைந்துள்ளது. இத்திருக்கோயிலுக்கு கும்பகோணத்தில் இருந்தும், தஞ்சாவூரில் இருந்தும் பாபநாசம் என்ற ஊரை அடைந்து, அங்கிருந்து திருக்கருகாவூர் என்னும் இத்திருத்தலம் அமைந்துள்ள சிற்றூரை அடையலாம். தஞ்சையிலிருந்து இதற்கு பேருந்து வழித்தடங்கள் A48(கோவிலுக்கு மிக அருகில் செல்லும் பேருந்து) , 16,34 & 44, கும்பகோணதிலிருந்து இதற்கு பேருந்து வழித்தடங்கள்11 & 29. Worship Timings: Morning : 5.30 am to 12.30 pm Evening : 4.00 pm to 8.00 pm Address: Sri Mullaivananatharswamy and Garbarakshambigai Amman temple, Thirukarukavur, Papanasam Taluk, Thanjavur District Pin code: 614 302 Phone: 04374-273423 Google Map Co-ordinates : https://goo.gl/maps/vUaeZ5da94r #aalayamselveer #garbarakshambigai

Comment