MENU

Fun & Interesting

என் அரிசி சுகர நிறுத்தும்! சவால் விடும் விவசாயி! டாக்டரே தேடி வந்து வாங்குறாரு! #diabetes #savesoil

Video Not Working? Fix It Now

#ricecultivation இளைஞராக இருந்து தனது தாய், தந்தையரின் ஆரோக்கியத்திற்காக 8 சென்ட் நிலத்தில் துவங்கிய இவரது இயற்கை விவசாய பயணம், இன்று 8 ஏக்கரில் பராம்பரிய நெல் சாகுபடியை வெற்றிகரமாகவும், நல்ல லாபத்துடனும் எடுத்து சென்று கொண்டிருக்கிறார் திருவண்ணாமலை புதூர் செங்கத்தை சார்ந்த விவசாயி திரு.ரகுபதி அவர்கள். ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் இடுபொருள் பயிற்சி, மதிப்புகூட்டல் பயிற்சி என பல்வேறு பயிற்சிகளில் கலந்து கொண்டு பாரம்பரிய நெல்லில் நல்ல மகசூல் ஈட்டி வரும் இவர், நெல்லை அரிசியாக மதிப்புக்கூட்டி சென்னை, பெங்களூர் போன்ற பெரு நகரங்களில் உள்ள தனது வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வருகிறார். இரசாயன விவசாயத்தில் விளையும் பயிரின் மகசூலும் அதன் சுவையும் முற்றிலும் குறைவான பலனை அளிப்பதை பல்வேறு விவசாயிகளின் மத்தியில் விழிப்புணர்வாகவும் எடுத்து சென்று வருகிறார். இவரது வெற்றிக்கதையை இக்கானொளி வாயிலாக அறிந்து கொள்வோம். தொடர்புக்கு திரு.ரகுபதி 90926 91541

Comment