இரண்டு செடிகளை இணைத்து புதிய காய் உருவாக்குவது விவசாயத்தில் வழக்கமாக நடப்பது தான். அதைப்போல சுண்டைக்காய் செடியில் கத்தரியை ஒட்டுக்கட்டும் முறை கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செய்யப்படுகிறது. இந்த ஒட்டு கட்டும் முறையில் சுண்டைக்காய் செடியில் கத்தரிக் காய் காய்க்கிறது.
இதற்கு சுண்டைக்காயை தேர்ந்தெடுப்பதற்கு காரணம் சுண்டைக்காய் செடிக்கு அதிக தண்ணீர் தேவைப்படுவதில்லை. நோயும் அதிகம் தாக்காது. இதற்காகத் தான் சுண்டைக்காய் செடி தேர்ந்தெடுக்கப்படுகிறது. இதில் மகசூல் 20 சதவீதம் அதிகமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இது பற்றிய ஒரு வீடியோ தொகுப்பை காணலாம்.#கோயம்புத்தூர் #Coimbatore #tnau #agriculture