சேலம் அம்மாபேட்டையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அன்னை தெரசா மனிதநேய அறக்கட்டளை கடந்த 2 ஆண்டாக இயங்கி வருகிறது. வேலுாரைச் சேர்ந்த விஜயபானு என்பவர் அறக்கட்டளை தலைவராக உள்ளார். ஆரம்பத்தில் இந்த அறக்கட்டளையின் மூலம் கூடை பின்னுதல், மெழுகுவர்த்தி தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு இலவச தொழிற்பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது. ஏழை எளியோருக்கு 10 ரூபாய்க்கு உணவு வழங்கப்பட்டது. இதனால் சேலம் மக்கள் மத்தியில் அறக்கட்டளையின் மீது நல்ல மரியாதை ஏற்பட்டது.#motherTeresatrust #salem #Dinamalar