MENU

Fun & Interesting

குறைவில்லா மகசூல் தரும் குத்து வாழை

Video Not Working? Fix It Now

முக்கோண நடவில் முத்தான வருமானம் தரும் ஆயிரம் ஆண்டு பழமையான பாரம்பரிய வாழை நடவு. ஒரு முறை நடவில் வருடத்தில் இருமுறை அறுவடை தரும் அற்புதமான குத்து நடவைப் பற்றி இந்த வீடியோ பதிவில் காண்போம். வழக்கமான நடவான 6 × 6 அடிக்கு பதில் 12 அடி வரிசை இடைவெளியில் கன்றுக்கு கன்று 2 அடி இடைவெளி விட்டு மும்மூன்று கன்றாக முக்கோண வடிவில் நடும்போது நல்ல தரமான குழைகளும் வருடத்தில் இருமுறை வெட்டுக்கு வரும். முதல் தாருக்கும் இரண்டாம் மரத்தின் தாருக்கும் இடைப்பட்ட காலம் 5 மாதம் மட்டுமே. வழக்கமான முறையில் 1200 கன்றுகளுக்கு ஒரே நேரத்தில் ஒரே அறுவடையில் 1100 தார்கள் மட்டுமே. ஆனால் குத்து நடவில் 750 மரங்களில் இரண்டு முறை அறுவடை யில் 1500 தார்கள் மட்டுமல்லாமல் ஊடு பயிர் வருமானம் உபரியாக. இரட்டிப்பு லாபம் பெற குத்து வாழை நடவு முறையை தேர்ந்தெடுப்போம். #ஈஷாவிவசாயஇயக்கம் | #IshaAgroMovement | #NaturalFarming Click here to subscribe for Isha Agro Movement latest Youtube Tamil videos: https://www.youtube.com/channel/UCtYfGsDUcFjnREwJFaj6awQ?sub_confirmation=1

Comment