Thirukolakudi Temple, திருக்கோளக்குடி கோயில்,
Shri Kagholapureeswarar Temple, திருகோளக்குடி சிவன் கோவில், திருக்கோளபுரீசுவரர், திருக்கோளக்குடிக் குடைவரை, திருக்கோளக்குடி திருக்கோளநாதர், திருக்கோளக்குடி முருகன் கோவில், திருக்கோளபுரீசர்.
திருகோளக்குடி சிவன் கோவில் திருக்கோளபுரீசுவரர்(Thirukolakudi Temple) Location - https://goo.gl/maps/LQ8Pv51Wjyi3NKmN9
இவ்வூரின் மலை மேல் உள்ள குடைவரைக் கோயில் சுவரில் உள்ள கல்வெட்டு பின் வரும் செய்தியை சொல்கிறது,
"ஸ்வஸ்திஸ்ரீ திருக்கோளக்குடி முன்பில் ஊருணி மூவேந்தன் என்னும் பசாசின் பேர்"
பொதுவாகக் கல்வெட்டுக்கள் வடமொழியில் 'மங்களம் உண்டாகட்டும்' என்ற பொருள் கொண்ட ' ஸ்வஸ்திஸ்ரீ' என்ற சொல்லுடனேதான் ஆரம்பமாகும்.
அந்த கல்வெட்டு சொல்லும் செய்தி என்ன வென்று பார்க்கலாம், இவ்வூரின் தெற்கில் உள்ள மலையைச் சுற்றியிருக்கும் ஊருணிக்கு உள்ளூர் மக்களால் மூவேந்தன் என்று அழைக்கப்படும் ஒரு பிசாசின் பெயரை வைத்துள்ளதாக அதில் சொல்லப்பட்டிருக்கிறது.
பொதுவாக அக்காலத்தில் பொது இடங்களுக்கு அரச குடும்ப உறுப்பினர்கள், புனிதமானவர்கள், ஊர்த் தலைவனின் பெயர், இல்லையென்றால் ஊர் மக்களுக்கோ கோயிலுக்கோ நன்மை செய்தவரின் பெயர் அல்லது பக்தி கொண்டவர்களின் பெயர்களை தான் சூட்டுவார்கள். ஆனால் இங்கு முழு கிராமத்திற்கும் ஒரே குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஒரு ஊருணிக்கு ஒரு பிசாசின் பெயரைச் சூட்டியிருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படுகிறது.
ஆனால் இங்கு ஒரு பிசாசின் பெயரை வைத்த காரணம் என்னவாக இருக்கும் என்று நாம் யோசிக்கும் போது அந்த பிசாசு ஏதோ ஒரு வகையில் அந்த ஊர் மக்களுக்கு நன்மை செய்திருக்க வேண்டும் அல்லது நன்மை செய்ததென்று மக்கள் நம்பியிருக்க வேண்டும். அதனாலேயே இப்பெயர் வந்திருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது. திருக்கோலக்குடி மக்கள் ஒரு தனி மனிதனின் மறைவுக்குப் பின்னரும் அன்புடன் நினைவுக் கூரப்படும் உடல் அற்ற ஓர் ஆன்மாவின் பெயர் ஒரு கிராமத்தின் நீர் ஆதாரத்திற்கு சூட்டப்பட்டியிருப்பது விந்தையானதாகவே பார்க்கப்படுகிறது
Thirukolakudi Temple Opening Time:
திருகோளக்குடி சிவன் கோவில் தினமும் காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
#aalayamselveer #thirukolakudi #shivantemple #ancienttemples #sivan #siva #tamiltemples #tamiltemple #tamilnadutemple #tamilnadutemples