1.மணிமேகலையை இயற்றியவர் சீத்தலைச் சாத்தனார்.
2.ஐம்பெருங்காப்பியங்களில் இரண்டாவதாக திகழ கூடியது.
3. மாதவியின் மகள் மணிமேகலையின் வரலாற்றைக் கூறுவதால் இந்நூல் மணிமேகலை என்னும் பெயரினைப் பெற்றது.
4. மணிமேகலைத் துறவு என்ற மற்றொரு பெயரும் இதற்கு உண்டு.
5. பரத்தை, மது, கொலை,களவு முதலியன கூடாது என வலியுறுத்தும் புரட்சிக் காப்பியாகத் திகழ்கிறது.
6. முப்பது காதைகள் உடையது.
7. சீத்தலைச் சாத்தனார் மதுரையைச் சேர்ந்தவர். இளங்கோவடிகளைச் சிலப்பதிகாரம் பாடுமாறு செய்தவர்.
8. இளங்கோவடிகளின் வேண்டுகோளால் மணிமேகலை பாடியவர்.
9. கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் என்று அழைக்கப்படும் இவர் தண்டமிழ் ஆசான் சாத்தன் நன்னூல் புலவன் எனப் பாராட்டப்பட்டார்.
10. கதைச்சுருக்கம்
உதயகுமரன் சம்பாபதியிடம் மணிமேகலையை காட்டி அருளுமாறு வேண்டுகிறான். அங்கு ஒரு சித்திரம் அவன் வேண்டுகோளின் பயனற்ற தன்மையினை விளக்கிக் கூறுகின்றது. அவன் அவ்விடத்திலிருந்து அகலுகின்றான். காயசண்டிகையின் உருவுடன் ஐயே மணிமேகலை தொடர்ந்து தர்மம் செய்து வருகின்றாள். சிறைச்சாலையின் உள்ளும் சென்று அவள் உணவளிக்க, அங்குள்ள காவலர், தம் மன்னன் இடத்தே சென்று அதனை உரைக்கின்றனர். மன்னன் தான் செய்யக்கூடியது யாதன வினவுகின்றான். அவள் கருத்துப்படி சிறைக்கோட்டம் அறக்கோட்டம் ஆக மாற்றுவதற்கு ஆணை பிறப்பித்தான்.