பக்திக்கு உகந்தது ஞானியர் திருவடியே | முனைவர் திரு இரா செல்வக்கணபதி | R. Selvaganapathy | Sorpozhivu
திருச்சிற்றம்பலம் .
தமிழ் மொழியில், உலகளாவிய சைவ - சமயம் குறித்த மாபெரும் முதல் பதிவான
சைவ - சமயக் கலைக்களஞ்சியம் ( Encyclopedia on Saivism)
பற்றி பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம்
• வேத காலத்துக்கு முற்பட்ட காலம் தொடங்கி,இன்று வரையில் ஏறத்தாழ 5 ஆயிரம் ஆண்டுக்கால சைவ - சமய வரலாற்று ஆவணமாக இக்களஞ்சியம் வடிவமைக்கப்பட்டுள்ளது
• 22 ஆயிரம் தலைமைப் பதிவுகளையும்,50 ஆயிரம் துணைப் பதிவுகளையும் உள்ளடக்கிய அகன்ற பரப்பைக் கொண்டது.
• உலகளாவிய பல்துறைச் சைவப் பேரறிஞர்கள் 50 பேர் கொண்ட ஆலோசனைக் குழுவும்,220 மூத்த சைவத்தமிழ் அறிஞர்களைக் கொண்ட ஆசிரியர் குழுவும் கலைக்களஞ்சிய வடிவமைப்புக்குத் தூண்களாக அமைந்தன.
• சைவ - சமயக் கலைக் களஞ்சியத்தின் தலைமைப் பதிப்பாசிரியர் செந்தமிழ் வாரிதி,சிவஞானக்கலாநிதி,கலைமாமணி,பேராசிரியர் டாக்டர். இரா. செல்வக்கணபதி ஆவார்கள்.
• 3000க்கும் மேற்பட்ட வண்ணப் படங்களை உள்ளடக்கியதாய்,மேற்கு நாடுகளின் குறிக்கத்தக்க சில ஆங்கில நூல்களுக்கு இணையான கட்டமைப்பில் வடிவமைக்கப் பட்டுள்ளது
• 10 தொகுதிகளும், முன்னுரைப் பகுதிகளுடன் 7200 பக்கங்கள் கொண்டன
கலைக்களஞ்சியத் தொகுப்பு வரிசை
1 சைவ சமயம் தமிழகம் ( புதுச்சேரி மாநிலம் உட்பட)
2. சைவ சமயம் - உலகம் (தமிழகத்து அப்பால்)
3. சைவத் திருமுறைகள்
4. திருமுறைத் தலங்கள்
5. பிற்காலத் தலங்கள்
6. சைவ சமய அருளாளர்கள்
7. சைவ சமய அருள் நூல்கள்
8. சைவ சித்தாந்தம்
9. சைவ சமய அமைப்புகள்
10.தோரணவாயில் என்பன சைவ - சமயக் கலைக்களஞ்சியத்தின் பத்துத் தொகுதிகள்.
சைவ சமயக் கலைக்களஞ்சியத் தலைமைப்பதிப்பாசிரியர் ,கலைமாமணி , முனைவர் .இரா .செல்வக்கணபதி அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவஞ்சலி முன்னிட்டு
சைவ சமயக் கலைக்களஞ்சியம் "50%" சலுகை விலையில் வழங்கப்படுகிறது.
சலுகை விலையில் பெற கீழ்க்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும்
தெய்வ சேக்கிழார் பதிப்பகம்
H 15/2 கரிகாலன் தெரு
கலாஷேத்ரா காலனி
பெசன்ட் நகர்
சென்னை - 600090
94440 21113
98401 67391
ஆன்லைனில் (online) பெற விரும்புவோர், கீழ்க்கண்ட இணையதளத்தை பயன்படுத்த வேண்டுகிறோம்
www.saivamonline.com
ஓம் நமசிவாய.
தங்கள் தொடர்பு உடையவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்க வேண்டுகிறோம்