MENU

Fun & Interesting

மூலத்திற்கு பன்றிக்கறி நல்லதா? பன்றிக்கறி மூல நோயை குணப்படுத்துமா என்று மருத்துவர் மாறன் கூறுகிறார்.

Dr Maran 288,852 6 years ago
Video Not Working? Fix It Now

#பன்றிக்கறி #மூலம் #Piles Visit https://springfieldwellnesscentre.com/ for reading many blogs on General health. You can read about the experiences of Dr Maran on his personal website at http://drmaran.com/ பன்றிக்கறி சாப்பிட்டால் மூலம் குணமாகும் என்ற வாதத்தை இந்த காணொளியில் நொறுக்குகிறார் மருத்துவர் மாறன். மூலம், பவுத்திரம் போன்ற ஆசன வாய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு மலச்சிக்கலே மூல காரணம் என்பதை கூறுகிறார். அப்படி இருக்கும் பட்சத்தில் மலம் கழிக்கும்போது ஆசனவாயில் ஏற்படும் வலியை விவரிக்கிறார் மருத்துவர் மாறன். இந்த எரிச்சலும், வலியும், உடல் சூடு அதிகரிப்பதால் ஏற்படுவது என்று பலர் நம்பியிருக்கிறார்கள். ஆனால் உடல் சூடு என்பது எல்லோருக்கும் ஒரே அளவில் தான் இருக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறார். இந்த பிறழ்ந்த நம்பிக்கை தான் உடல் சூட்டை தணிக்க பன்றிக்கறி என்று பரவலாக எல்லோரும் நம்புகிறார்கள் என்று கூறுகிறார். ஆனால் அதில் உண்மை இல்லை என்பதை விரிவாக எடுத்துரைக்கிறார். பன்றிக்கறி எப்படி மூலத்தின் மேல் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று விளக்கமாகச் சொல்லுகிறார். மூல நோய் உள்ளவர்கள் கொழுப்பு அதிகமுள்ள பன்றிக்கறியை சாப்பிடும் போது மலம் இளகி மென்மையாக வெளியேறும். இந்த மாற்றம் மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு ஆறுதலாக இருக்கும். பன்றிக்கறி என்றில்லாமல் எந்த மலமிளக்கியும் இதே வேலையைத் தான் செய்யும் என்ற உண்மையை மருத்துவர் மாறன் கூறுகிறார். ஆனால் எந்த மலமிளக்கியும் மூலத்தை குணப்படுத்தாது என்று கூறும் மருத்துவர், அவை தற்காலிக ஆறுதலை மட்டுமே கொடுக்கும் என்று கூறுகிறார். தொடர்ந்து சாப்பிட்டு வர ஆறுதலாக இருக்கமே ஒழிய அதனை குணப்படுத்தாது. அதனால் மூலமோ, பவுத்திரமோ, எந்த ஆசனவாய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் பன்றிக்கறி சாப்பிடுவதால் தீராது. மூலத்திற்கு பன்றிக்கறி சாப்பிடுவது நல்லதும் இல்லை, கெட்டதும் இல்லை என்று மருத்துவர் மாறன் முடிக்கிறார். You can visit Springfield Wellness Centre in the following social media channels too https://www.facebook.com/springfieldwellnesscentre/ https://plus.google.com/+SpringfieldWellnessCentreChennai https://twitter.com/drmaran https://www.youtube.com/channel/UCL4YMLjA7tCoHv4mK2U24vw https://www.linkedin.com/company/springfield-wellness-centre

Comment