#namashivaya #Shivayanama
சைவ சமயத்தின் மூல மந்திரம் "நமசிவாய" எனும் திருவைந்தெழுத்து ஆகும். இது பஞ்சாட்சரம் எனவும் பஞ்சாட்சர மந்திரம் எனவும் அழைக்கப்படுகிறது.
இந்த பஞ்சாட்சர மந்திரத்தில் பல மந்திர வடிவங்கள் உண்டு. நமசிவாய, சிவாயநம, சிவயசிவ, சிவசிவ, சி என்று உள்ளன. இவையல்லாமல் பல வடிவங்களாக இந்த பஞ்சாட்சர மந்திரம் விளங்கப்படுகின்றது.
இதில் பிரதானமாக அனைவரும் பயன்படுத்துவது நமசிவாய, சிவாயநம மற்றும் சிவசிவ. அதிலும் குறிப்பாக பலருக்கும் நமசிவாய மற்றும் சிவாயநம என்கிற இரு மந்திரங்களிலும் ஒரு சந்தேகம் பல காலமாக உள்ளது. இந்த இரண்டு மந்திரங்களும் ஒன்றுதானா? எது சரியானது? யார் எதை சொல்வது? அதற்கு உண்டான பலன்கள் என்ன? என்ற கேள்விப்பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
இதற்கு ஒரு விளக்கமாக திருமதி. தேச மங்கையர்க்கரசி அம்மா இந்தப் பதிவை அளித்துள்ளார்.
- ஆத்ம ஞான மையம்.