திருத்தணிகை அடியாருடன் கூடி உன்னை வழிபட்டு
உய்ய அருள். திருப்புகழ் பாட.
தனத்தன தானம் தனத்தன தானம்
தனத்தன தானம் ...... தனதான
தனத்தன தானம்... தனதான
எனக்கு என யாவும் படைத்திட, நாளும்
இளைப்பொடு, காலம் ...... தனில் ஓயா
எடுத்திடு, காயம் தனைக் கொடு மாயும்
இலச்சை இலாது, என் ...... பவம் மாற,
உனைப்பல நாளும் திருப்புகழாலும்
உரைத்திடுவார் தங்கு ...... உளி மேவி,
உணர்த்திய போதம் தனைப் பிரியாது, ஒண்
பொலச் சரண் நானும் ...... தொழுவேனோ?
வினைத் திறமோடு அன்று எதிர்த்திடும் வீரன்
விழ, கொடு வேள் கொன் ...... றவன், நீயே
விளப்பு என, மேல் என்று இடக்கு அயனாரும்
விருப்பு உற, வேதம் ...... புகல்வோனே!
சினத்தொடு சூரன் தனைக் கொடு வேலின்
சிரத்தினை மாறும் ...... முருகோனே!
தினைப்புனம் மேவும் குறக்கொடி யோடும்
திருத்தணி மேவும் ...... பெருமாளே