இது "கிறித்தவ கீர்த்தனைகளும் புத்தெழுச்சி பாடல்களும்" புத்தகத்தில் வரும் 352 வது பாடலாகும். இப் பாடல் அருட்திரு மோகன் ராஜ் அவர்கள் தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் மாணவராக இருக்கும் பொழுது எழுதியது.
திருச்சபையாகிய திருக்குடும்பத்தில் அனைவரும் இணைந்து மகிழ்ச்சியோடு வாழவேண்டும் என்பதை வலியுறுத்தும் ஓர் அற்புதமான பாடல்.
பாடியவர்கள்:
அருட்திரு சுரேஷ் ராஜன் ,
அருட்திருமதி முனைவர் கிரேஸ் ஐடா ராஜன்.
மெல்லிசை:
Dr கிப்ட்சன் டேவிட் ராஜன்
தொடர்பு:
மின்னஞ்சல்: [email protected]
அலைபேசி : 7606906649
பாடல் வரிகள்:
மனம் இசைந்து அனைவரும் உடன் பிறப்பாய்
தினம் வாழ்வது சிறப்பானது!
நன்மையானது இன்பமானது
மண்வாழ்வினில் பேரழகு!
1. அது - ஆரோனின் தலைமீது பொழிந்து
அவனது தாடியில் வழிந்து
அங்கியில் குழைந்து தொங்கலில் இழைந்து
கீழ் வடிந்திடும் பரிமளம் போன்றது!
2. அது - எர்மோனின் மலையதன் மேலும்
சீயோனின் சிகரங்கள் மீதும்
மெல்லெனக் கவிந்து சில்லெனக் குவிந்து
தினம் படர்ந்திடும் பனியினைப் போன்றது!
3. இன்று - இனம்மொழி பொருள்நிலை கொண்டு
எத்தனை பிரிவுகள் உண்டு?
அன்பினில் பகிர்ந்து இன்பமாய் இணைந்து
ஒன்றாய் இணைந்து வாழ்வதே அருளரசு!
#tamilchristiansongs #tamildevotionalsongs #songsofcomfort #rajansministryupdates #lyrics #Suresh_Rajan #Grace_Ida_Rajan #tamilchristiansong #tamilchristianhymn #tamiloldsong #மனம்_இசைந்து_அனைவரும்_உடன்பிறப்பாய் #கீர்த்தனை_352