MENU

Fun & Interesting

கணவன் மனைவி ஒற்றுமை மந்திரம் | கணவன் மனைவி பிரிந்தவர் ஒன்று சேர | Kanavan Manaivi Otrumai Pariharam

Aalayam Selveer 137,256 5 years ago
Video Not Working? Fix It Now

Kanavan Manaivi Otrumai Pariharam(Kanavan Manaivi Otrumai Manthiram) - Abirami Anthathi Miracles, Abirami Anthathi Benefits பிரிந்தவர் ஒன்று சேர | கணவன் மனைவி கருத்து வேற்றுமை நீங்க | இல்வாழ்க்கையில் இன்பம் பெற - அபிராமி அந்தாதி பிரிந்தவர் ஒன்று சேர மந்திரம் - பிரிந்தவர் ஒன்று சேர பரிகாரம் - கணவன் மனைவி சேர்ந்து வாழ பரிகாரம் - கணவன் மனைவி பிரிந்தவர் ஒன்று சேர - கணவன் மனைவி ஒற்றுமை மந்திரம் - கணவன் மனைவி ஒற்றுமைக்கு பரிகாரம் - கணவன் மனைவி ஒற்றுமையாக இருக்க மந்திரம். கணவன் மனைவி இடையே கருத்து வேற்றுமை நீங்கி, பிரிந்தவர்கள் மீண்டும் சேர்ந்து இல்வாழ்க்கையில் இன்பம் பெற உதவும் மந்திரசக்தி படைத்த 3 அபிராமி அந்தாதி பாடல்கள் பின்வருமாறு, அபிராமி அந்தாதி பாராயணம்: அபிராமி அந்தாதியில் உள்ள நூறு பாடல்களையும் தினம்தோறும் பாடுவது என்பது கொஞ்சம் கஷ்டமானது தான். அதனால் நூறு பாடல்களையும் உச்சரித்த பலனை 101வது பாடலாக வரும் நூல் பயன் என்ற ஒரு பாடலை உச்சரிப்பதன் மூலம் நாம் பெறலாம். காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்திலோ அல்லது மாலை 4.30 to 6.30 மணிக்கு அபிராமி அந்தாதி பாடி வழிபடலாம். நாம் ஏற்கனவே முந்தய பதிவுகளில் சொன்ன மாதிரி, முதலில் 101வது பாடலாக வரும் நூல் பயன் பாடலை அம்மாவை மனதார வேண்டி மூன்று முறை பாராயணம் செய்ய வேண்டும். பின்னர் என்ன காரிய சித்தி வேண்டுமோ அந்த காரிய சித்திக்கான அபிராமி அந்தாதி பாடலை மூன்று முறை பாராயணம் செய்ய வேண்டும். அபிராமி அந்தாதி நூற்பயன் பாடல்: அபிராமி அந்தாதி 101 வது பாடல் ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை அண்டம் எல்லாம் பூத்தாளை மாதுளம் பூ நிறத்தாளை புவி அடங்கக் காத்தாளை அங்குச பாசாங்குசமும் கரும்பும் அங்கை சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் இல்லையே. அபிராமி அந்தாதி பாடல் பொருள்: எங்கள் தாயானவளை, அபிராமி வல்லியை, எல்லா உலகங்களையும் பெற்றவளை, மாதுளம் பூப்போன்ற நிறத்துடையவளை, எல்லா உலகங்களையும் தன் ஆளுகையின் கீழ் கொண்டு காப்பவளை, திருக்கரங்களில் மலர் அம்புகள் ஐந்தையும், பாசத்தையும், அங்குசத்தையும், கரும்பு வில்லையும் வைத்திருபவளை, மூன்று கண்களையுடைய தேவியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் நேராது, எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்வர். 1. பிரிந்தவர் ஒன்று சேர - அபிராமி அந்தாதி 2 வது பாடல் துணையும் தொழும் தெய்வமும், பெற்ற தாயும் சுருதிகளின் பணையும், கொழுந்தும் பதி கொண்டவேரும் பனிமலர்பூங் கணையும், கருப்புச்சிலையும், மென்பாசாங்குசமும், கையில் அணையும் திரிபுர சுந்தரி ஆவது அறிந்தனமே. அபிராமி அந்தாதி பாடல் பொருள்: என் வாழ்வின் எல்லா நிலைகளிலும் எனக்குத் துணையாக, நான் என்றென்றும் தொழுதேத்தும் தெய்வமாக, என்னைப் பெற்ற அன்னையாக, உலகத்தின் ஆதாரங்களான வேதங்களின் கிளைகளாக, அவற்றின் சாராம்சமாக, வேதங்கள் இப்பூமியில் நிலைபெற அவற்றின் வேராக இருப்பவள். குளிர்ந்த மலர்க்கணையும், கரும்பினாலான வில்லையும், மெல்லிய பாசத்தையும், அங்குசத்தையும் கையில் ஏந்தியிருக்கும் திரிபுர சுந்தரியான அன்னை அபிராமியே என் துணையாகவும் நான் தொழும் தெய்வமாகவும் என்னைப் பெற்ற தாயாவும் இருக்கிறாள் என்பதை நான் அறிந்து கொண்டேன். தம்பதியர், நெருக்கமான உறவினர்கள், நண்பர்கள் ஏதாவது ஒரு பிரச்சனையின் காரணமாக மனஸ்தாபம் ஏற்பட்டு பிரிந்து விட்டு, இப்போது தங்களின் பாசத்திற்குரியவர்களுடன் மீண்டும் சேர வேண்டும் என்று விரும்பினால் தினந்தோறும் திருவிளக்கு ஏற்றி வைத்து இத்திருப்பாடலை 3 முறை ஓதினால் பிரிந்த தம்பதிகள், பிரிந்த நண்பர்கள் மற்றும் பிரிந்த உறவினர்கள் மீண்டும் ஒன்றிணைவர். 2. கணவன் மனைவி கருத்து வேற்றுமை நீங்க - அபிராமி அந்தாதி 90 வது பாடல் வருந்தா வகைஎன் மனத்தாமரையினில் வந்து புகுந்திருந்தாள் பழைய இருப்பிடமாக இனிஎனக்குப் பொருந்தா தொருபொருள் இல்லை, விண்மேவும் புலவருக்கு விருந்தாக, வேலை மருந்தானதை நல்கும் மெல்லியலே. அபிராமி அந்தாதி பாடல் பொருள்: விண்ணில் வாழும் அமரர்களுக்கு விருந்தாக பாற்கடலில் தோன்றிய அமுதத்தைத் தந்திட்ட மென்மையான அபிராமியானவள் அவளே வந்து நான் வருத்தமடையா வண்ணம் என் இதயக் கமலத்தில் புகுந்து அதுவே அவளது பழைய இருப்பிடமாக எண்ணி அமர்ந்தாள். கிடைத்தற்கரிய அமுதத்தையே பெற்றுத் தருபவள் என் மனத்தாமரையில் வந்து அமர்ந்த பின்னர் எனக்கு வேறு ஏது குறை? இனி என்னால் ஆகாத ஒன்றென எதுவுமே இல்லை. பிரிந்த தம்பதியர் தினந்தோறும் திருவிளக்கு ஏற்றி வைத்து இத்திருப்பாடலை 3 முறை ஓதினால் கருத்து வேற்றுமை நீங்கி பிரிந்த தம்பதியர் கூடி வாழ்வர் என்று பெரியோர் சொல்வார்கள். 3. இல்வாழ்க்கையில் இன்பம் பெற - அபிராமி அந்தாதி 11 வது பாடல் ஆனந்தமாய் என் அறிவாய், நிறைந்த அமுதமுமாய், வானந்தமான வடிவுடையாள், மறை நான்கினுக்கும் தானந்தமான சரணார விந்தம் தவளநிறக் கானந்தம் ஆடரங் காம் எம்பிரான் முடிக்கண்ணியதே. அபிராமி அந்தாதி பாடல் பொருள்: அபிராமி அன்னையே! நீயே என் ஆனந்தமாய் என் அறிவாய் விளங்கி என்னுள் நிறைந்த அமுதமுமாய் விளங்குபவள். மண், நீர், நெருப்பு, காற்று, வான் என்னும் ஐம்பூதங்களின் வடிவானவள். நான்கு மறைகளுக்கும் எல்லையாக இருப்பது அனைவருக்கும் சரணாகதியை அளிக்கும் உனது பாதங்களே. அப்பாதங்கள் வெண்ணிறச் சாம்பல் படர்ந்த மயானத்தைத் தாம் ஆடல் நிகழ்த்தும் இடமாகக் கொண்ட சிவபெருமானின் திருமுடியில் அணியப்பட்ட மாலையாயும் திகழ்கிறது. இந்த மூன்று காரிய சித்தி பாடல்களையும்நூல்பயன் பாடலுடன், ஒவ்வொரு பாடலையும் 3 தினமும் முறை அம்மாவை மனதார வேண்டி பாராயணம் செய்து தம்பதிகள் இடையே உள்ள சண்டை சச்சரவு மற்றும் கருத்து வேற்றுமைகள் நீங்கி, ஒன்று சேர்ந்து, இல்வாழ்க்கையில் எல்லா இன்பங்களையும் பெற்று வாழ வாழ்த்தி வணுங்குகின்றோம். இந்த பதிவு நம் அன்பர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம், இந்த பதிவை உங்கள் நண்பர்கள் மட்டும் உறவினர்களுக்கும் ஷேர் செய்யுங்கள் அவர்களுக்கும் இது கட்டாயம் பலன் அளிக்கும். #aalayamselveer #kanavanmanaiviotrumai

Comment