வெள்ளியங்கிரி சுவாமிகள் வழக்கை வரலாறு
சேலம் மாவட்டத்தில் சின்னக்கொல்லப்பட்டி என்ற சிற்றூரில் 1938ம் வருடன் பிப்ரவரி மாதம் 15ம் தேதியன்று எளிய குடும்பத்தில் பிறந்த பெத்தாக்கவுண்டர் (சுவாமிகளின் இயற்பெயர்) சற்குரு ஞானி வெள்ளிங்கிரி சுவாமிகள் ஆன அற்புதம் மெய் சிலிர்க்க வைக்கும் ஓர் உன்னத காவியமாய் விரிகிறது. துள்ளித் திரியும் பிள்ளைப்பருவத்தில் துறவு மகான் ரமணரைப் போல! சித்த யோக வித்தகரான சுவாமி சிவானந்த பரமஹம்சரின் நேரடிச் சீடர்களில் ஒருவரான குற்றாலம் சங்கரானந்த சுவாமிகளை தம் குருவாகக் கொண்டு, தீட்சை பெற்று வாசியோகக் கலையில் வல்லவராகி அவரின் அருளாசி பெற்றார், பகவான் இராமகிருஷ்ணரிடம் சுவாமி விவேகானந்தர் பெற்றது போல. குருநாதரின் அருளுரையை ஏற்று மூர்த்தி, தலம், தீர்த்தம் முறையாய்த் தொழுது கயிலை மலைச் சாரலை அடைந்து நம் சுவாமிகள் தவம், மேற்க்கொண்ட போது பகவான் ரமணரை அழைத்த அண்ணாமலை போல - நம் சுவாமிகளை தென்கயிலை என்று போற்றி வணங்கப்படும் வெள்ளிங்கிரி ஈர்த்து இழுத்து அழைத்து வந்தது.
வந்தார்! வாழ்ந்தார்! வாழ்கிறார்!
முகவரி
சற்குரு ஞானி வெள்ளிங்கிரி சுவாமிகள் ஜீவசமாதி
முள்ளங்காடு செக்போஸ்ட்,
செம்மேடு அஞ்சல்,
கோயம்புத்தூர் மாவட்டம்,
தமிழ்நாடு - 641114
தொடர்பு கொள்ள
Phone: +91 88707 54715
Email: [email protected]
திறந்திருக்கும் நேரம்
காலை 8.00 மணி முதல்
மாலை 4.00 மணி வரை
மாலை 4 மணி வரை மட்டுமே அனுமதி