தசவாயுக்களின் வேலை:
1. பிராணன் - உயிர்க்காற்று
2. அபானன் – மலக்காற்று
3. உதானன் – ஒலிக்காற்று
4. வியானன் – தொழிற்காற்று
5. சமானன் - நிரவு காற்று
6. நாகன் – ஏப்பக் காற்று
7. கூர்மன் – இமைக்காற்று
8. கிருகரன் – தும்மற்காற்று
9. தேவதத்தன் – கொட்டாவிக் காற்று
10. தனஞ்செயன் – வீங்கற் காற்று
ஒல்கா அன்பின் நல்லவர் கேண்மையின்
உயிர் உடல் விடினும், தானுடல் விடாது
ஒக்கு நின்று அங்கு உடலினை வீக்கித்
தலைகிழித்து அகல்வது தனஞ்செயன் ஆகும்(பிங்கல நிகண்டு 42)
இதை வீங்கற் காற்று என்று கூறுவார்கள். மேலே கூறிய 9 காற்றுகளும் உடலுடன் உயிர் ஒட்டி உறவாடி உலவுகிற வரை உடம்பிற்குள்ளேயிருந்து உறுதொழில் புரிந்து, உற்ற துணையாக செயல்பட்டு வரும். உடலை விட்டு பிராணன் என்கிற காற்று பிரிந்து விட்டால், உடல் பிரேதம் ஆகிவிடுகிறது. ஆமாம் சவமாகிவிடுகிறது. உடல் சவம் ஆன பிறகும் கூட, உடலுக்குள்ளே இந்த தனஞ்செயன் காற்று தங்கியிருக்கும். இந்தக் காற்று உடலில் தங்கியிருக்கும் வரை, உடலானது வீங்காது. நாற்றம் அடிக்காது. உடலின் தன்மையும் மாறாமல் எடை கூடாமல் இருக்கும். இறுதியாக இந்த பிண உடலை விட்டு வெளியேறுவது தனஞ்செயன் வாயு ஆகும். இது இறந்த உடலை வீங்க வைப்பதும். அழுக வைப்பதும்,நவதுவாரங்களில் நுரை, நீர் வரச்செய்தல், உடம்பைப் நாற்றம் எடுக்கச் செய்தல் இதன் வேலைகளாகும். எப்போது இவ்வேலை முடிகிறதோ அது வரை நமது பிண உடலில் வருடக் கணக்கில் அது இருக்கும். பிறகு தலையின் உச்சிக் குழி வெடித்து இது வெளியேறும்
இவ்வாறு நேரம் கழித்து, காலம் தாழ்த்தி உள்ளே இருக்கிற தனஞ்செயன் காற்று தேகத்தைவிட்டு வெளியேறுகிறபோது, பிணத்தையும் துள்ளத் துடிக்கச் செய்து விட்டுத்தான் வெளியேறும். இந்த நேரத்தில், பிணத்தின் அருகில் இருப்போர், அதன் துடிப்பைப் பார்த்துவிட்டு, உயிர் வந்து விட்டது என்று சந்தோஷக் குரல் எழுப்புவதும் சகஜமாக நடப்பது தான். இதை பிங்கால முனிவர் மிக அழகாக எழுதிக் காட்டுகிறார். உயிர்களிடத்தில் நீங்காத அன்பினை உடைய நல்லவரோடு கொண்ட நட்பால், உயிர் போகினும் தான் போகாது, பிறகு அங்கிருந்த உடலினை அழித்தபடி, தலைகிழித்து அகல்வது னேஞ்செயன் எனும் காற்றின் செயலாகும் என்பதுதான் இந்தப்பாடலின் அர்த்தம்.
உயிர் எப்படி பிரியும்:
1. பழி பாவம் செய்தவர்களுக்கு மலத்துடன் மல வாசல் வழியாக பிரியும்.
2. அதை விட சற்று குறைவாக பாவஞ் செய்தவர்களுக்கு நீர்வாயில் வழியாக உயிர் பிரியும்.
3. பாவம் நிறையவும், புண்ணியம் குறைவாகவும் செய்த உயிர்கள் நாபி வழியே பிரியும்.
4. பாவம் புண்ணியம் சமமாக செய்தவர்களின் உயிர்கள் வாய் வழியாகப் பிரியும்.
5,6. அதிக பாவம் செய்யாத உயிர்கள் இடது, வலது நாசிகள் வழியாகப் பிரியும்.
7,8 அதை விட சிறிதளவே பாவம் செய்த உயிர்கள் இடது, வலது செவிகள் வழியாகப் பிரியும்.
9,10 மிகவும் புண்ணியம் செய்த உயிர்கள் இடது, வலது கண்கள் வழியாகப் பிரியும்.
11. சிவயோக நெறியில் இருக்கும் உயிர்கள் தனது பிராப்த கர்மங்களை, தனக்கு கொடுக்கப்பட்ட உடல் கொண்டு கழித்து, பல காலங்கலாகப் தான் பழகிய யோகப் பயிற்சியைின் துணை கொண்டு சுழுமுனை நாடிவழியாக பிராணனை மேல் எழுப்பி, பிரமாந்திர வழியை திறந்து கபாலம் வழியாக ஔிமயமாக உச்சி வாசலூடாக செல்லும். அவ்வாறு சென்ற உயிர் மீண்டும் பிறவாது.
#aalayamselveer #dasavayu