MENU

Fun & Interesting

பழைய உடன்படிக்கையில் இஸ்ரவேலரை அழித்த அதே ஆவி இப்போது புறஜாதி கிறிஸ்தவர்கள் மீது.100 சதவீதம் தோல்வி.

DAYofLORD Jesus 11,310 5 years ago
Video Not Working? Fix It Now

313OCT2019 God has permitted the same spirit that destroyed the Israelite, to operate against the gentile Christians. Same test. And the gentile church too failed, 100% பழைய உடன்படிக்கையில் இஸ்ரவேலரை அழியப்பண்ணிய அதே ஆவியை புறஜாதி கிறிஸ்தவர்கள் மீது இயேசு அனுமதித்துள்ளார். ஒரே மாதிரியான சோதனை. இதில் இஸ்ரவேலர்களைப்போலவே புறஜாதி கிறிஸ்தவர்கள் 100 சதவீதம் தோற்றுவிட்டனர். 1) இஸ்ரவேலர் நியாயப்பிரமாணத்தைப் புறக்கணித்தனர். புறஜாதிகள் தேவனுடைய பிரமாணத்தை முழுவதும் புறக்கணித்துள்ளனர். இயேசுவின் வசனங்கள்தான் தேவனுடைய பிரமாணம். மத்தேயு, மாற்கு, லூக்கா மற்றும் யோவான் ஆகிய 4 சுவிசேஷப் புத்தகங்களிலுள்ள இயேசுவின் கட்டளைகளை யாரும் போதிப்பதில்லை. யாரும் பின்பற்ற விரும்பவும் இல்லை. எச்சரிக்கைகள் அத்தனையும் வீணாகியுள்ளது. அதே ஆவி தேவ பிள்ளைகளிடம் வெற்றி பெற்றுள்ளது. 2) இஸ்ரவேலர் ஜீவனுள்ள தேவனைப் புறக்கணித்துவிட்டு இரண்டு பொன் கன்றுக்குட்டிகளை இஸ்ரவேலின் தேவன் எனத் தொழுது வந்தனர். எந்த இஸ்ரவேலின் ராஜாவும் இதனை மாற்ற முயலவில்லை. அழிந்து போனார்கள். அசீரியாவுக்கும் பாபிலோனுக்கும் சிறையிருப்புக்குச் சென்றார்கள். தேசம் இல்லாமல் போயிற்று. இன்று புறஜாதி கிறிஸ்துவ சபைகளை அதே ஆவி பிடித்துள்ளது. ஆவிக்குறிய விக்கிரக ஆராதனை அத்தனை சபைகளிலும் நடந்து வருகிறது. ஆனால் அவர்கள் கண்களில் அது தெரிய மறுக்கிறது. இயேசுவின் கட்டளைகள் மற்றும் வசனங்களுக்கு இங்கு இடமில்லை. பழைய ஏற்பாடுதான் முக்கியம் எனப் பிரசங்கிக்கப்படுகிறது. ஜனங்களும் அதைத்தான் நம்புகிறார்கள். பழைய ஏற்பாட்டின் தசமபாகம் மற்றும் காணிக்கை இன்னமும் முழுமையாகப் புறஜாதி சபைக்கு உண்டு என்று நம்புகிறார்கள். வேதத்தில் தெளிவாக வசனங்கள் உள்ளன – நியாயப்பிரமாணம் புறஜாதிகளுக்கு ஒருபோதும் தரப்படவில்லை என்று. ஆனால் அதனை ஏற்றுக்கொள்ள எவருக்கும் மனம் இல்லை. தசமபாகம், காணிக்கை என்ற பொருளாசையாகிய விக்கிரக ஆராதனை சபைகளில் ஆட்சி செய்கிறது. இதனை வளர்த்துவிட பழைய ஏற்பாடு வார வாரம் போதிக்கப்படுகிறது. எரொபெயாமின் பொன் கன்றுக்குட்டிகள் 2ம் உள்ளன. திருமணம் செய்து வைப்பது மற்றும் மரித்தவர்களை அடக்கம் பண்ணுவது. வேதத்தில் இல்லாத விக்கிரக சடங்குகள் இவை என்பதை இவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. முடிவு சமீபமாகத் தெரிகிறது. சீஷர்கள் என்ன செய்ய வேண்டும் - இந்தக் காலக் கட்டத்தில். பரலோகம் எதிர்பார்க்கும் செயல்திட்டம் என்ன? Annexures: 1) பரலோக ராஜ்யம் என்றால் என்ன? What is Kingdom of Heaven/Jesus? இயேசுவின் ராஜ்யம் / ராஜ்யம்? Matthew 16:28, Mark 9:1, Luke 9:27 https://www.youtube.com/playlist?list=PLOW2MfOIuVcV2vRkVYbZOzCL_oaYTLJiY 2) “Your wife is the biggest gift from God to you" (in Tamil) - to receive this teaching in pdf, please send mail to [email protected] 'உன் மனைவிதான் இயேசு உனக்குத் தந்துள்ள மிகப்பெரிய பரிசு" (தமிழில் மட்டுமே). இந்தப் புத்தகத்தை ப.டி.எப் கோப்பாகப் பெற மின்னஞ்சல் அனுப்பவும் - [email protected]  3) இரண்டு பொன் கன்றுக்குட்டிகளைத் தொழுது கொண்ட இஸ்ரவேலின் ராஜாக்கள்: 1) யெரொபெயாம் 1 ராஜா. 12:28-30 (22 வருடம்) 2) யெரொபெயாமின் குமாரனாகிய நாதாப் 1 ராஜா.15:25-26 (2 வருடம்) 3) அகியாவின் குமாரனாகிய பாஷா1 ராஜா. 15:33-34 (24 வருடம்) 4) பாஷாவின் குமாரனாகிய ஏலா 1 ராஜா. 16:8,12 (2 வருடம்) 5) சிம்ரி 1 ராஜா.16:10,15,18-19 (7 நாட்கள்) 6) உம்ரி 1 ராஜா. 16:25-26 (12 வருடம்) 7) உம்ரியின் குமாரனாகிய ஆகாப் 1 ராஜா. 16:29-31 (22 வருடம்) 8) ஆகாபின் குமாரனாகிய அகசியா 1 ராஜா. 22:51-52 (2 வருடம்) 9) ஆகாபின் குமாரனாகிய யோராம் 2 ராஜா. 3:1-3 (12 வருடம்) 10) நிம்சியின் மகனான யோசபாத்தின் குமாரன் யெகூ 2 ராஜா.10:29-31 (28 வருடம்) 11) யெகூவின் குமாரனாகிய யோவாகாஸ் (2 ராஜா. 13:1-2) – 17 வருடம். 12) யோவாகாசின் குமாரனாகிய யோவாஸ் 2 ராஜா. 13:10-11 (14 வருடம்) 13) யோவாசின் குமாரன் யெரொபெயாம் (2 ராஜா.14:23-24) 41 வருடம். 14) யெரொபெயாமின் குமாரனாகிய சகரியா (2 ராஜா.15:8-9) 6 மாதம். 15) யாபேசின் குமாரனாகிய சல்லூம் -2 ராஜா. 15:10) ஒரு மாதம். 16) காதியின் குமாரனாகிய மெனாகேம் (2 ராஜா. 15:17-18) 10 வருடம். 17) மெனாகேமின் குமாரனாகிய பெக்காகியா (2 ராஜா. 15:23-24) 2 வருடம். 18) ரெமலியாவின் குமாரனாகிய பெக்கா (2 ராஜா. 15:27-28) 20 வருடம். 19) ஏலாவின் குமாரனாகிய ஓசெயா (2 ராஜா.17:1-2) – 9 வருடம். (மொத்தம் :230+ வருடம்.)

Comment