MENU

Fun & Interesting

இயேசு திரைப்படம் | தமிழ் மொழிபெயர்ப்பு

Video Not Working? Fix It Now

இயேசு கிறிஸ்து 2,000 ஆண்டுகளுக்கு முன் பிறந்தவர். அவருடைய வாழ்க்கையும் இறப்பும் இந்த உலகையே மாற்றியமைத்தது. இன்றும் அவருடைய இன்றியமையாத வார்த்தையினாலும் அற்புத அடையாளங்களினாலும் பலருடைய வாழ்வில் எல்லையில்லா தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார். அவருடைய வல்லமைமிக்க வார்த்தை, இன்றும் உலகம் முழுவதிலும் உள்ள 300 கோடிக்கும் மேற்பட்ட மக்களின் வாழ்க்கையை மறுரூபமாக்கி வருகிறது. ​​ ‘இயேசுவின் வாழ்க்கை’ என்ற இந்த திரைப்படம் இயேசுவுடன் மிகவும் நெருக்கமாய் இருந்த நண்பர்களால் சொல்லப்பட்ட அவருடைய வாழ்க்கை நிகழ்வுகளாகும். வேதாகமத்திலுள்ள யோவான் எழுதிய சுவிசேஷத்தை தழுவிய நிகழ்வுகளை கொண்டது. அவர் வாழ்க்கையை பற்றிய இந்த திரைப்படத்தின் மூலம் இயேசு எவ்வாறு இந்த உலகத்தின் வரலாற்றை மாற்றினார் என்பதை இப்போது கண்டறிந்துகொள்ளுங்கள். இது உங்களுக்கு ஒரு ஆசீர்வாதமாக இருக்கும் என்று நம்புகிறோம். ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக! பார்க்கவும்: உங்கள் கருத்துக்களை சமர்ப்பிக்கும்போது, மற்றவர் உங்களை எப்படி நடத்த வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ அப்படியே அவர்களையும் நடத்துங்கள். ♥ யோவான் நற்செய்தியின் அத்தியாயங்கள்: 0:00:00   யோவான் எழுதிய நற்செய்தியின் அறிமுகம் 0:00:51   யோவான் 1: யோவான் ஸ்னாநகர் & இயேசுவின் முதல் சீடர்கள் 0:12:50   யோவான் 2: ஒரு அதிசயம் நிறைந்த திருமணம் & தேவாலயத்தில் கோபம் கொண்ட இயேசு 0:20:00   யோவான் 3: நிக்கொதேமு மற்றும் யோவான் இயேசுவை சந்தித்தல் 0:25:17   யோவான் 4: குணமளித்தலின் கதைகள் | சமாரிய பெண் | இயேசு ஒரு அதிகாரியின் மகனைக் குணப்படுத்துகிறார் 0:34:14   யோவான் 5: குளத்தின் அருகே ஒரு குணம்பெறுதல் 0:42:46   யோவான் 6: தண்ணீர் மீது நடத்தல் 0:57:39   யோவான் 7: இவர்தான் மேசியாவா? 1:05:11   யோவான் 8: விபச்சாரம்: நீங்கள் பிடிபட்டால் என்ன நடக்கும் 1:16:20   யோவான் 9: பார்வையற்ற ஒருவனை இயேசு குணப்படுத்துகிறார் 1:24:20   யோவான் 10: நல்ல மேய்ப்பன் 1:30:36   யோவான் 11: லாசருவின் கதை 1:40:51   யோவான் 12: இயேசு தனது மரணத்தைப் குறித்து பேசுகிறார் 1:51:13   யோவான் 13: இயேசு தம் சீடர்களின் கால்களை கழுவுகிறார் 2:00:10   யோவான் 14-16: கடைசி உரை: இயேசு தம் நண்பர்களுக்கு ஆறுதல் கூறுகிறார் 2:14:34   யோவான் 17: இயேசுவின் ஜெபம் 2:18:52   யோவான் 18: இயேசு கைது செய்யப்படுகிறார் 2:27:59   யோவான் 19: இயேசுவின் மரணம் 2:40:50   யோவான் 20: இயேசு மரணத்திலிருந்து உயிர்த்தெழுகிறார் 2:47:37   யோவான் 21: கலிலேயா கடலில் ஒரு வியக்கத்தக்க மீன்பிடி!

Comment