Nattukottai Nagarthar Tv வியில் வந்துள்ள இந்த நிகழ்ச்சி சென்னை திருத்தணி பாதயாத்திரைக்குழுவின் 25ம் ஆண்டு விழாவில் (2019)பதிவு செய்யப்பட்டது. நகரத்தாரின் திருமணத்தில் இசை குடிமானம் எழுதும் பழக்கம் எப்படி வந்தது? பட்டினத்தார் துறவியான பொழுது அவரது தாயார் என்ன சொன்னார்?பொதுவாக நகரத்தார் மரபில் தாயார் காலமானால் மூத்த மகன் கிரியைகள் செய்து பின் தலையை மழித்துக்கொள்வது வழக்கம். இந்த வழக்கத்துக்கான காரணம் என்ன? உலகத்தில் யார் பெரியவர் என்று பார்க்கும் பொழுது சிவபெருமான்தான் பெரியவர் என்று நமக்கு தோன்றும். ஆனால் சிவபெருமானுக்கும் பெரியவர் இருக்கிறார்கள்! அவர்கள் யார்? நம் நகரத்தார் திருமணத்தில் கட்டும் தாலிக்கு இரும்பு பொட்டி தாலி என்று ஒரு பெயர் வரக் காரணம் என்ன? லண்டனில் உள்ள விக்டோரியா ஆல்பர்ட் மியூசியத்தில் காசியின் வரைபடம் உள்ளது. அந்த படம் 1815ல் வரையப்பட்டது. அதில் காசி விஸ்வநாதருக்கு நம் நகரத்தார் சம்போ கொண்டு செல்லும் காட்சி தீட்டப்பட்டுள்ளது.நகரத்தாரின் திருமுருக பக்தி என்பது உலகப் பிரசித்தி பெற்றது. தனது பக்தராகிய நகரத்தாரை காக்க விராலிமலை முருகன் கோர்ட்டுக்கு மயில் உருவில் வந்து வெள்ளைக்கார துரை நீதியரசர் முன்பு நின்று சாட்சி சொன்ன கதை. காரைக்குடி அரண்மனைபொங்கல் ஐயா வீட்டுக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது? பாதயாத்திரை என்றால் என்ன? என்று கவிஞர் அரசி பாடிய பாடல், வழக்கம் போல நம் செட்டிநாட்டு 76 ஊர்கள் பெயர்களைக் கொண்ட கவிஞர் பழனியப்பன் எழுதிய பாடல், என்று மிக சுவையான பல தகவல்களை நீங்கள் இந்தக் காணொலியில் கண்டு மகிழலாம். இந்தக் கானொலியை முழுமையாகக் காணுங்கள். Nattukottai Nagarthar Tv யை சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள். செட்டிநாடு டிவிக்கு பதிலாக வந்து கொண்டு இருப்பதே Nattukottai Nagarthar Tv டிவி
#Chettinadtv #Devakottairamanathan #Nattukottainagarthartv