MENU

Fun & Interesting

ஏழு ஜென்ம பாவம் தீர்க்கும் லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோயில்|கல்வி செல்வம் வீரம் மூன்றும் அருளும் தலம்

Video Not Working? Fix It Now

தாலி பாக்கியம் தரும் லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோயில் மூலவர்: சப்தரிஷீஸ்வரர் அம்பாள்: ஸ்ரீபெருதிருப்பிராட்டியார் தலவிருட்சம்: அரச மரம் தீர்த்தம்: சிவகங்கை தீர்த்தம் புராண பெயர்: திருப்பெருந்துறை ஊர்: லால்குடி மாவட்டம்: திருச்சி சப்தரிஷிகளும் தவமிருந்து வணங்கி வழிபட்டு பூஜைகள் செய்த திருத்தலம் என்பதால், சப்தரிஷிகளுக்கும் சிவனார் திருக்காட்சி தந்தருளியதால், இங்கே உள்ள ஈசனுக்கு சப்தரிஷீஸ்வரர் எனும் திருநாமம் அமைந்தது என்கிறது ஸ்தலபுராணம். லால்குடியில் உள்ளது சப்தரிஷீஸ்வரர் திருக்கோயில். இந்தத் தலத்தின் இன்னொரு சிறப்பு... சிதம்பரம் திருத்தலத்துக்கு அடுத்தபடியாக, மார்கழி மாத திருவாதிரை திருநட்சத்திர நன்னாளில், ஆருத்ரா தரிசனமும் இரவில் ஆனந்தத் திருநடனமும் இங்கு விமரிசையாக நடைபெறுகிறது. அதேபோல், திருக்கடையூர் திருத்தலத்துக்கு இணையாக இங்கே உள்ள அமிர்தகடேஸ்வரர் சந்நிதியில், சஷ்டியப்த பூர்த்தி எனப்படும் அறுபதாம் கல்யாணமும் சதாபிஷேகம் எனப்படும் எண்பதாம் கல்யாண வைபவமும் இங்கு விமரிசையாக நடைபெறுகிறது. ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து வைபவத்தை செய்துகொள்கின்றனர். மகாலட்சுமி தாயார், இங்கு இந்தத் தலத்தில் கடும் தவம் புரிந்து மகாவிஷ்ணுவைத் திருமணம் செய்துகொண்டாள் என்கிறது ஸ்தல புராணம். எனவே இந்தத் தலத்துக்கு வந்து, சப்தரிஷீஸ்வரரை தரிசனம் செய்து பிரார்த்தனை செய்துகொண்டால், விரைவில் திருமண பாக்கியம் கைகூடும் என்பது ஐதீகம். பெருந்திருப்பிராட்டியூர், ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீதுர்கை, ஸ்ரீமகாலட்சுமி முதலானோர் அருள்பாலிக்கும் ஒப்பற்ற திருத்தலம். பிராத்தனை இங்கு, அம்பாள், சரஸ்வதி, மகாலட்சுமி தாயார், துர்கை முதலானோருக்கு புடவை சார்த்தி வேண்டிக்கொண்டால், தடைப்பட்ட திருமணம் விரைவில் நடந்தேறும். தாலி பாக்கியம் நிலைக்கும். குழந்தைகள் கல்வியில் சிறந்துவிளங்குவார்கள். கடன் முதலான தொல்லையில் இருந்து விரைவில் நிவாரணம் பெறலாம். இல்லத்தில் சகல ஐஸ்வரியங்களும் குடிகொள்ளும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். வெண்குஷ்டம் நோய் நீங்க வழிபட வேண்டிய தலம். அமைவிடம் திருச்சியில் இருந்து அரியலூர் செல்லும் வழியில் சுமார் 24 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து லால்குடி வர நகர பேருந்து வசதி உள்ளது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து இருந்து அரியலூர், திருமழப்பாடி மற்றும் ஜெயங்கொண்டம் செல்லும் பேருந்தில் பயணம் செய்து லால்குடி எளிதாக அடையலாம். லால்குடி ரயில் நிலையம் மற்றும் பஸ் நிலையம் அருகே கோயில் அமைந்துள்ளது. கோயில் Google Map Link https://maps.app.goo.gl/PQnsPnq32VeGCUqX8 ஆலய அர்ச்சகர் தொலைபேசி எண் +91 9600268582 +91 8825493788 மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் +91 7994347966 if you want to support our channel via UPI Id nava2904@kvb Join Our Channel WhatsApp Group https://chat.whatsapp.com/LRPxBQMNHRAGAJPNwzCB04 Join this channel to get access to perks: https://www.youtube.com/channel/UCv4F_mJmuC7-bA9B0v20B5w/join - தமிழ்

Comment