MENU

Fun & Interesting

சனிபகவான் தினமும் வழிபடும் ஆதிகுடி அங்குரேஸ்வரர் கோயில் உடல் குறைபாடுகள் நீங்க வழிபட வேண்டிய தலம்

Video Not Working? Fix It Now

ஆதிகுடி பிரேமாம்பிகை சமேத அங்குரேஸ்வரர் கோயில் மூலவர்: அங்குரேஸ்வரர் அம்பாள்: பிரேமாம்பிகை தீர்த்தம்: காசி கமல தீர்த்தம் தலவிருட்சம்: வன்னி மற்றும் வில்வம் புராண பெயர்: திருஆதிகுடி ஊர்: ஆதிகுடி மாவட்டம்: திருச்சி தல சிறப்பு நம் நடப்பு சந்ததியினர் ஊனம் அடைந்திருந்தால், விபத்தால் அங்க வலிமை இழந்திருந்தால், பக்கவாதம் போல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், Genetics Diseases மற்றும் Heart Attack ஆல் பாதிக்கப்பட்ட அன்பர்கள் அகஸ்தியர் விஜயத்தில் கூறிய படி இந்த ஆலயத்தில் இருக்கும் விமல லிங்கத்தின் வலதுபுறம் நன்றாக திரண்ட வெண்ணெய் காப்பும், இடதுபுறம் வெண்ணெய் காப்பின் மேல் நிறைய மாதுளை முத்துகளைப் பதித்தும் வழிபட்டால் குணம் நிச்சயம் என்பது பக்தர்கள் நம்பிக்கை. இந்த விமல லிங்கம் அருள்பாலிக்கும் அங்குரேஸ்வரர் ஆலயம் ஆதிகுடியில் உள்ளது. தல வரலாறு : நவக்கிரகங்களில் ஆயுள்காரகனாகப் போற்றப்படுபவர் ஸ்ரீ சனி பகவான். இவர் ஸ்ரீ சூரிய பகவானுக்கும், சாயா தேவிக்கும் மகனாகப் பிறந்தவர். ஒரு சந்தர்ப்பத்தில் எம மூர்த்தியின் தண்டத்தால் கால் ஊனம் அடைந்தார் சனி பகவான். இந்நிலையிலேயே பல ஆலயங்களில் வழிபட்டார்; புனித தீர்த்தங்களில் நீராடினார். கடைசியில் புனிதமான ஆதிகுடி ஸ்ரீஅங்குரேசுவரர் ஆலயத்தை அடைந்தார். இத்தலத்தில் பல யுகங்கள் தவம் புரிந்து இங்கு எழுந்தருளியுள்ள ஸ்ரீவிமல லிங்க மூர்த்தியின் அருளைப் பெற்றார். அதன் விளைவாக சனி பகவானின் குறை நீங்கியதாக "அங்குரேசுவரர் திருக்கோயில் தலபுராணம்' எடுத்துரைக்கின்றது. பழங்காலத்தில் இந்தக் கோவில் அமைந்துள்ள இடம் அடர்ந்த புதர்களும் புல் வெளிகளும் நிறைந்து காணப்பட்டது. ஆதிகுடி என்ற இந்த ஊரில் விமலன் என்ற பெயருடைய மாடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் வசித்து வந்தான். அவன் பிறவியிலேயே ஒரு கை, கால் ஊனம் உள்ளவனாய் இருந்தான். அவன் தினசரி மாடுகளை புல் வெளிக்கு ஓட்டிச் சென்று மேய்த்து விட்டு, மாலையில் வீடு திரும்புவது வழக்கம். ஒருநாள் அவன் ஓட்டிச் சென்ற மாடுகளின் கூட்டத்திலிருந்து பசு ஒன்று தனியாக பிரிந்து ஓரிடத்தில் நின்று தானாக பாலைச் சொரிந்தது. இதைக் கண்ட விமலன், தன் கையில் இருந்த அங்குரத்தால் (மண்வெட்டியால்) அந்த இடத்தை செதுக்கினான். அப்போது அவன் செதுக்கிய இடத்திலிருந்து ரத்தம் பீறிட்டு வெளியானது. ரத்தத்தைக் கண்டதும், விமலன் அச்சமடைந்தான். செய்வது அறியாது திகைத்து நின்றான். பின் பதற்றத்துடன் ஊருக்குள் ஓடி, ஊர் மக்களிடம் தான் கண்ட காட்சியைக் கூறினான். ஊர் மக்கள் அவனை வியப்புடன் பார்த்தனர். பிறவி ஊனம் உள்ளவனாக இருந்த அவன், ஊனம் நீங்கி முழு நலத்துடன் தங்கள் முன் அவன் நிற்பதைக் கண்டு வியப்பின் எல்லைக்கேச் சென்றுவிட்டனர். ஆம்! விமலனின் உடல் குறைபாடு முழுமையாக நீங்கியிருந்தது. இதையடுத்து அவன் கூறிய இடத்திற்கு ஊர் மக்கள் அனைவரும் சென்றனர். அவன் சொன்ன இடத்தில் தோண்டிப் பார்த்தபோது, அங்கு ஒரு அழகிய சிவலிங்கம் தென்பட்டது. அதை அந்த இடத்திலேயே பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தனர். பின்னர் சோழ மன்னனால் அந்த இடத்தில் ஒரு ஆலயம் கட்டப்பட்டது. அங்குரம் எனச் சொல்லப்படும் மண்வெட்டியால் தோண்டியபோது வந்த லிங்கம் என்பதால், இறைவனுக்கு அங்குரேஸ்வரர் என்ற பெயரே நிலைபெற்றுவிட்டது. இங்குள்ள வாய்க்காலுக்கு கமல காசி தீர்த்தம் என்று பெயர். காசிக்கு இணையான தலம் இது. நீத்தார் கடன் செய்ய உகந்த இடம் என்றும் கூறப்படுகிறது. தல பெருமை மாடு மேய்க்கும் சிறுவன் மேல் கருணை கொண்டு, அவனது பிறவி ஊனத்தை குணமாக்கிய இத்தலத்து இறைவன், தன்னை ஆராதிக்கும் பக்தர்களின் மன ஊனத்தையும் விலக்கி அருள்புரிவார் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. இங்கு ஸ்ரீ சனீஸ்வரர், எப்போதும் ஸ்ரீவிமல லிங்க மூர்த்தியை வழிபடுவதால், இத்தலத்தில் ஸ்ரீவிமல லிங்க வழிபாடே ஸ்ரீசனீஸ்வர வழிபாடாகவும் ஆகின்றது. இந்த விமல லிங்கத்திற்கு தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், வேப்பெண்ணெய், இலுப்பை எண்ணெய் போன்ற எட்டு வகை மூலிகைத் தைலகாப்பு இட்டு, புனித தீர்த்தங்களால் அபிஷேகித்துப் பூஜிக்க வேண்டும். பிறகு வெண்கலப் பானையில் பால் பொங்கல் செய்து, முழு நீள வாழை இலையில் வைத்து அன்னதானமாக அளித்து, வெண்கலப் பானையையும் தானமாக அளித்தால் அனைத்து நலன்களும் கிட்டும்; அனைத்து விதமான நோய்களிலிருந்தும் இறையருளால் விடுதலை கிடைக்கும்! இத்தலம் நீத்தார் கடன் செய்யவும் உகந்த திருத்தலமாகும். இவ்வூரை காசிக்கு இணையாகச் சொல்வதுண்டு. இக்கோயிலுக்கு எதிரிலேயே மயானம் உள்ளது. தென் தமிழகத்தில் ஸ்ரீவாஞ்சியம் மற்றும் ஆதிகுடி என்ற இவ்விரு சிவத்தலத்திற்கு எதிரில் மட்டுமேதான் சுடுகாடு அமைந்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. இவ்வாலயத்தின் தல விருட்சமாக வன்னி மரம் உள்ளது. அமைவிடம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து அன்பில் செல்லும் பேருந்தில் பயணம் செய்து ஆதிகுடி அடையலாம். லால்குடியில் இருந்து சுமார் 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. கோயில் Google Map Link https://maps.app.goo.gl/65GUQLxvv87scNBj7 ஆலய அர்ச்சகர் தொலைபேசி எண் +91 7550398684 மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் +91 7994347966 if you want to support our channel via UPI Id nava2904@kvb Join Our Channel WhatsApp Group https://chat.whatsapp.com/LRPxBQMNHRAGAJPNwzCB04 Join this channel to get access to perks: https://www.youtube.com/channel/UCv4F_mJmuC7-bA9B0v20B5w/join - தமிழ்

Comment