மீஞ்சூர் புளிகுளம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் மற்றும் அங்காள பரமேஸ்வரி கோயில் கும்பாபிஷேகம்
மீஞ்சூரை அடுத்த புளிகுளம் அருள்மிகு ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் மற்றும் அங்காள பரமேஸ்வரி கோவில் மற்றும் முனீஸ்வருக்கும் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த புளிக்குளம் என்ற கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ பிரசன்னா வெங்கடேச பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சியாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் பெருந்திரளான கிராம மக்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என்று கோஷமிட்டு பெருமாளை வழிபட்டனர். மேலும் அங்குள்ள அங்காள பரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.