மட்டக்களப்பு பாரம்பரிய வழிபாட்டு இசையுடன் கூடிய அம்மன் ஆலயங்களின் காவியம்
கிழக்கிலங்கையில் குறிப்பாக மீன் பாடும் தேனாடாகிய மட்டக்களப்பில் சிறு தெய்வ வழிபாடுகளில் மக்கள் சிறப்பாக ஈடுபடுகின்றனர்...அதிலும் சக்தி
வழிபாடே மேலோங்கி நிற்கின்றது...தமிழ் மக்கள் சங்க காலத்திற்கு முன்பிருந்தே கொற்றவையை வழிபட்டு வந்துள்ளனர்...அக்கால்ம் காதலும் போருமே
தமிழர் வாழ்வாக இருந்தது... மிகப் புராதன சிந்து வெளி நாகரிக காலத்திலும் சக்தி வழிபாடு இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.... திராவிடரின்
நாகரீகத்தில் அன்னையே மிக முக்கிய இடத்தை வகித்தாள்...அந்த மரபு மட்டக்களப்பில் இன்றும் தொடர்கிறது... சக்தி வழிபாட்டு மரபில் கண்ணகி வழிபாடு
கிராமம் தோறும் மிக உன்னத பண்பாட்டின் ஊற்றாய் அமைகின்றது....நீங்கள் இங்கே கேட்டுப் பரவசம் அடையப்போகும் பராசக்தி பக்தி காவியப்பாடல்கள்
கண்ணகி,,காளி,,,த்ரௌபதி,,,மாரி,,பேச்சி முதலிய அம்மன்களையும் வணங்கி வாழ்த்தி வாழ்க்கைக்கான வரம் கேட்கும் பாடல்களாக அமைகின்றன....இந்த
ஆதி பராசக்தி காவியப்பாடல்களை யாத்தவர் நமது பிரதேசத்தின் ஒப்பில்லாத மூத்த கவிஞர் திமிலைத்திமிலன் ஆவார்.... காவியத்தை பக்திப்பரவசத்தோடு
பாடுகின்றார்கள் தொலைக்காட்சிக் கலைஞர் இசைக்கலைமணி சாந்தினி தர்மநாதனும் அவர் மாணவரான வானொலி கலைஞர் எஸ்.வி.பத்மஸ்ரீயும் ஆகும்....
பாடல்களுக்கு இசை அமைத்திருக்கின்றார்கள் ஜெ.கனிஸ்கன்,,,,எஸ்.ஸ்ரீமுருகன். ஒலிப்பதிவு ஐ.ராஜேந்திரா....இம்மகத்தான கைங்கரியத்திற்கான நிதி உதவி
அளித்திருப்பவர் இல-290,,பிரதான வீதி,,,நொச்சிமுனை மட்டக்களப்பைச் சேர்ந்த தியாகராஜா ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களாவார்....இனி நீங்கள் பக்திப்பரவசத்தோடு
பராசக்தி காவிய இசையிலே மூழ்கி இன்புறுவதோடு ஆன்மீக ஊற்றிலும் நனையலாம்....வாருங்கள் பக்திப்பரவச வாருதியில் பங்கு கொள்ளலாம்