திருப்பூர் மாவட்டம், தாராபுரம் ஸ்ரீலஷ்மி மஹாலில் பிரம்மாண்டமாக நடைப்பெற்ற "சமவெளியில் மர வாசனை பயிர்கள் சாத்தியமே" என்ற கருத்தரங்கத்தில் 5000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்...
ஒரு அரசாங்கம் செய்யக்கூடிய பணியை ஈஷா காவேரி கூக்குரல் செய்கின்றது. இதற்காக என் சார்பிலும் முதலமைச்சர் சார்பிலும் நன்றியை வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று விழாவில் கலந்துகொண்ட தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர்.MP. சுவாமிநாதன் அவர்கள் பதிவிட்டிருந்தார்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கேரளா கர்நாடகா மாநிலங்களிலிருந்தும் முன்னோடி விவசாயிகளும் விஞ்ஞானிகளும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
விழாவில் கேரள மாநில வேளாண் பல்கலைக்கழகம் அங்கீகரித்த சிறந்த ஜாதிக்காய் வகைகளை பராமரிக்கும் விவசாயிகளுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது..
சமவெளியில் ஏற்கனவே ஜாதிக்காய் விவசாயம் செய்யும் முன்னோடிகள் வழங்கிய அனுபவ உரை புதிதாக வந்திருந்த விவசாயிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக இருந்தது.
விஞ்ஞானிகள் சமவெளியில் மர வாசனை பயிர்களை சாத்தியப்படுத்துவதற்கான தெளிவான திட்ட விளக்கத்தை அளித்தனர். மேலும் மரவாசனை பயிர்களின் உலகளாவிய தேவையையும் உள்நாட்டு தேவையையும் அதனை விற்பனை செய்யும் வழிமுறைகளையும் இந்திய நறுமணப் பயிர்கள் வாரியத்தின் வல்லுநர்கள் விளக்கினார்கள்.
சமவெளியில் மிளகை எப்படி சாத்தியப்படுத்தினோமோ அதே போல் மரவாசனை பயிர்களையும் சாத்தியப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையோடு குறைந்த விலையில் வழங்கப்பட்ட ஜாதிக்காய் லவங்கப்பட்டை கிராம்பு அவகோடா ஆகிய நாற்றுகளை விவசாயிகள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர் காவேரி கூக்குரல் 80009 80009
#naturalfarming #agrofest #isha #cauverycalling