MENU

Fun & Interesting

ஆங்கிலேயரை அலறவிட்ட தமிழர் | ஆறுமுக நாவலர் | மற(றை)க்கப்பட்ட தமிழர்கள்-2 | SangathamizhanTV

Video Not Working? Fix It Now

ஆங்கிலேயரை அலறவிட்ட தமிழர் | ஆறுமுக நாவலர் | மற(றை)க்கப்பட்ட தமிழர்கள்-2 | SangathamizhanTV மற(றை)க்கப்பட்ட தமிழர்கள் Playlist: https://www.youtube.com/playlist?list=PLqLB9hNk1T3AbdJiQO45DyGJ4po3pSEKQ மறைமலை அடிகள்: https://youtu.be/Y0VxW9JBRTM ஆறுமுக நாவலர்: https://youtu.be/w2kh2OEj3pI மறைக்கப்பட்ட அல்லது மறக்கப்பட்ட தமிழர்கள் என்கிற இந்த தொடரில் திராவிடர்களும் ஆரியர்களும் திட்டமிட்டு மறைத்த தமிழர்களைப் பற்றியும் தமிழ் சமுதாயத்திற்கு அவர்கள் ஆற்றிய பங்களிப்பு பற்றியும் பல அரிய தகவல்களை பார்க்க போகிறோம். இந்த தொடரில் நான் சொல்லப்போகும் பல தலைவர்கள் பற்றி நிறைய பேருக்கு தெரியாது காரணம் சுதந்திரத்திற்கு முன்பு ஆரியர்களின் ஆதிக்கத்தால் தமிழ் தலைவர்கள் மறைக்கப்பட்டார்கள் சுதந்திரத்திற்கு பிறகு ஆரியத்தின் பிள்ளையான திராவிடர்களும் அதே வேலையை தான் செய்தார்கள். தமிழர் அல்லாதவர்களை மட்டுமே தமிழின தலைவர்களாக முன்னிறுத்தி பல்லாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த தமிழர் வரலாற்றை 100 ஆண்டுகளுக்குள் சுருக்கியது திராவிடம். இப்படி சூழ்ச்சியால் மறைக்கப்பட்ட தமிழர்களைப் பற்றி தமிழர்களுக்கு தெரியப்படுத்தும் ஒரு சிறு முயற்சியே இந்த தொடர். இந்த பதிவில் நாம் பண்டைய தமிழ் இலக்கண இலக்கிய ஓலைச்சுவடிகளை அழியாமல் காத்து அதனை அச்சில் ஏற்றி பதிப்புத்துறையில் பலருக்கு முன்னோடியாக விளங்கிய யாழ்பாணத்து தமிழறிஞர் ஆறுமுக நாவலர் பற்றித்தான் பார்க்கப்போகிறோம். ஏட்டுச்சுவடிகளிலிருந்து பழந்தமிழ் நூல்களை மீட்டுக் கொடுத்த பெருமைக்குரியவர்கள் என்று ஆறுமுகநாவலர், சி.வை.தாமோதரம் பிள்ளை. உ.வே.சாமிநாதையர், ச.வையாபுரிப்பிள்ளை எனப் பெரிய பட்டியலையே அடுக்கலாம். ”தமிழ் இலக்கியங்களைப் பதிப்பித்த பெரும்பணிக்கு அடித்தளம் அமைத்தவர் ஆறுமுக நாவலர்; சுற்றுச்சுவர் எழுப்பியவர் சி.வை.தாமோதரம் பிள்ளை; கூரை வேய்ந்தவர் உ.வே.சாமிநாதையர்.” என்று திரு.வி.க. கூறியுள்ளது தமிழ்ப்பதிப்பு வரலாற்றையே சுருக்கமாகக் காட்டுகிறது.ஆனால் உ.வே.சா.அவர்களை மட்டுமே நினைவில் போற்றி மற்ற சான்றோர்களை மறந்தது முறையா?. ஏட்டுச்சுவடிகளைக் கண்டறிந்து நூல்களைப் பதிப்பிக்கும் பணியில் முனைந்து பாடுபட்டார். இதற்காகச் சொந்தமாக அச்சு இயந்திரம் வாங்கி வித்தியானுபாலனயந்திரசாலை என்னும் பெயரில் அச்சுக்கூடம் நடத்தினார் ஆறுமுக நாவலர். இலக்கணம், சமயநூல்கள், காப்பியங்கள் எனப் பலவகையாக நாற்பத்துநான்கு நூல்களைப் பதிப்பித்தார். இலக்கணம் தொடர்பாகவும் சைவசமயத்திற்கு விளக்கமாகவும் இருபத்துநான்கு நூல்கள் எழுதியுள்ளார். பதினாறு நூல்களுக்கு உரை எழுதியுள்ளார். இவர் உரை எழுதிய நூல்களுள் ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நல்வழி முதலான சிறுவர் இலக்கியமும் அடங்கும். பெரியபுராணம், திருவிளையாடற்புராணம், திருமுருகாற்றுப்படை முதலான இலக்கியங்களுக்கு இவருடைய உரை எளிமையாக மக்கள் புரிந்துகொள்ள வழிவகுத்தது. ஆங்கில நூல்கள் பதிக்கப்படுவதைப் போன்றே உள்ளடக்கம், பொருள் அடைவு, பாடவேறுபாடு, அடிக்குறிப்பு ஆகிய பகுதிகளோடு சிறப்பாகப் பதிப்புச் செய்தார். பதிப்புப்பணியில் இன்று ஈடுபடுவோருக்குக் கூட வழிகாட்டும் வகையில் இவரது பதிப்புகள் அமைந்துள்ளன. தமிழ் உரைநடை இவருக்கு முன் மிகக் கடினமாக எளிதில் புரிந்துகொள்ள இயலாத வகையில் அமைந்திருந்தது. ஆங்கிலத்தைப் போன்றே அரைப்புள்ளி (கமா), முக்கால் புள்ளி, முற்றுப்புள்ளி ஆகிய நிறுத்தற்குறிகளைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் ஆறுமுகநாவலரே என்பது குறிப்பிடத்தக்கது.ஆறுமுக நாவலரை “செந்தமிழைப் பேணி வளர்ந்த பெரும்புலவன்” என கவிமணி போற்றியுள்ளார். #SangathamizhanTV #ArumugaNavalar #ஆறுமுக நாவலர் #மற(றை)க்கப்பட்டதமிழர்கள் #உ.வே.சா. #சி.வை.தா # பதிப்புத்துறையின்முன்னோடி *************************************************************************************** Join this channel to get access to perks: https://www.youtube.com/channel/UC0Nf0_j2P9DR-jw5mKxvt2Q/join For more videos please SUBSCRIBE to Sangathamizhan TV: https://www.youtube.com/channel/UC0Nf0_j2P9DR-jw5mKxvt2Q Email ID: [email protected] Follow me on Telegram: http://t.me/sangathamizhanTV Follow me on Facebook Page: https://www.facebook.com/ChangaTamizhan/

Comment