pesum deivam maha periyava
பெரியவா அருளிய சனி பகவானுக்கான பரிகாரம்
சனிபகவானால் ஏற்படும் பிரச்சனையில்(கெடுபலனில்)
இருந்து உங்களைபாதுகாக்கும் 4 எளிய பரிகாரம்
சனி பெயர்ச்சி /சனி திசை/சனி புத்தியில்
இருந்து உங்களை பாதுகாக்கும்
இதை 1 முறை கேட்டாலே சனி தோஷம் விலகும் ..
தசரதன் வாக்கு தேவதையாகிய சரஸ்வதி தேவியை தியானித்து பின் சனிபகவானைக் குறித்து ஸ்தோத்திரம் செய்யத் தொடங்கினான்..
நம கிருஷ்ணாய நீலாய சதகண்ட நிபாய ச
நமகாலாக்னிரூனாய க்ருதாந்தாய ச வை நம
நமோ நிமலாம்ஸ தேஹாய தீர்கச்மரு ஜடாய ச
நமோ விசால நேத்ராய சுக்ஷ்கோதர பயாக்ருதே
நம புஷ்கல காத்ராய ஸ்தூல ரோம்ணேத வை நம
நமோ தீர்க யசுஷ்காய காலதம்ஷ்ட்ர நமோஸ்துதே
நமேஸ்த கோடாக்ஷாய துர்நிரீச்ரயாய வை நமே
நமோ கோராய ரெளத்ராய பீஷ்ணாய கபாலிநே
நமஸ்தே ஸர்வ பக்ஷாயபலீமுக நமோஸதுதே
சூர்ய புத்ர நமஸ்தேஸ்து பாஸ்கர பயதாய ச
அதோத்ருஷ்டே,நமஸ்தேஸ்து ஸம்வர்த்தக நமோஸ்துதே
நமோ மந்த கதே,துப்யம் நிஸிம்த்ரஷாய நமோஸ்துதே
தபஸா தகத் தேஹாய நித்யப் யோக ரதாய
நமோ நித்யம் க்ஷதார்த்தாய அத்ருப்தாய ச வை நம
ஞான சக்ஷுர் நமஸ்தேஸ்து கச்யபாத்தேஜ ஸுநவே
துஷ்டோ தகாசி வை ராஜ்யம் ருஷ்டோ ஹரஸு தத்க்ஷணாத்...
இந்த ஸ்தோத்திரன் விளக்கம் :
கரியவனே, நீல நிறம் படைத்தவனே, நீலகண்டன் போல் சிவந்த காலாக்னி போன்ற உருவன் உடையவனே, உன் கருணையைப் பெற வேண்டி மீண்டும் மீண்டும் வணங்குகிறேன். உயர்ந்த தேகம் படைத்தவனே. உன்னை வணங்குகிறேன் . அகன்ற விழிகளையுடையவனே உன்னை வணங்குகிறேன். பயங்கரமான தோற்றம் உடையவனே, உன்னை நான் வணங்குகிறேன். புஷ்கல கோத்திரத்தில் பிறந்தவனே, தடித்த ரோமம் உடையவனே, உன்னை வணங்குகிறேன். அகன்ற தாடை உடையவனே ,ஜடாமுடி தரித்தவனே, அகன்ற கண்களும், ஒட்டிய வயிறுமாக பயங்கரமான தோற்றமுடையவனே உன்னை வணங்குகிறேன். சூரிய புத்திரனே, சூரியனுக்கு பயத்தை உண்டாக்கக்கூடியவனே, மெதுவாக நடப்பவனே, நீண்ட தவத்தால் வருந்திய தாகம் உடையவனே, யோகத்தில் நிலைத்து நிற்பவனே, உன்னை வணங்குகிறேன். ஞனக்கண் உடையவனே, கச்யப் குமாரனாகிய சூரியனின் புத்திரனே, உன்னை வணங்குகிறேன். சனிபகவானே, நீ கருணைக் கட்டினால் உன்னுடைய அன்புக்கு பத்திரமான மனிதன் மகாராஜனாகிறன். யானை,சேனை,படைகளும் அந்தஸ்தும் பெறுகிறான். அதேபோல் உன்னுடைய கோபத்திற்கு ஆளாபவன் எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தாலும் அக்கணமே எல்லாவற்றையும் இழந்து பரம தரித்திரனாகி விடுகிறான். ஏ சனி பகவானே யாராக இருந்தாலும் அவர்கள் மேல் உன் பார்வை பட்டுவிட்டால் அவர்கள் வேரோடு அழிந்து போகிறார்கள் ஆகையால் நீ அனுக்கிரஹ மூர்த்தியாக கருணைக்கண் கொண்டே நீ பார்க்க வேண்டும். யாரையும் கோபப்பார்வை பார்க்க வேண்டாம். உன்னைத் தொழுது சேவை செய்கின்ற பாக்கியத்தை அளிக்க வேண்டும் என்று தசரதன் பிரார்த்தனை செய்தான்.
sani dosa pariharam/sani peyarchi parikaram 2023
sani parikaram/sani dosam parikaram