ஒரு மகள் தன்னுடைய தந்தை அல்லது தாயின் சொத்தில் உரிமை கேட்க முடியாத முக்கியமான மூன்று சூழ்நிலைகள்:
1. ஒரு தந்தை அல்லது தாயினுடைய சொத்து முதலில் மூதாதையர் வழிவந்த சொத்தா அல்லது தந்தை அல்லது தாயினுடைய சுய சம்பாத்திய சொத்தா என்பதை முதலில் பார்க்க வேண்டும்.
அதன் பின்பு அந்த சொத்து தன்னுடைய தாய் அல்லது தந்தையின் உடைய சுய சம்பாத்திய சொத்து எனில் அவர்களுடைய வாழ்நாளில் அந்த சொத்தில் உரிமை கேட்க ஒரு மகளுக்கு உரிமை கிடையாது. ஒருவேளை அந்த சொத்து தன்னுடைய தாய் அல்லது தந்தையின் உடைய மூதாதையர் வழிவந்த பரம்பரைச் சொத்தாக இருக்கும் பட்சத்தில் அந்த சொத்தில் உரிமை கேட்க ஒரு மகளுக்கு உரிமை உண்டு.
2. இரண்டாவது சூழ்நிலை, ஒரு மகள் தானாக முன்வந்து விடுதலை பத்திரம் எனக்கு இந்த சொத்து வேண்டாம் என்று எழுதிக் கொடுத்து இருந்தால் அத்தகைய சொத்தில் உரிமை கேட்க மகளுக்கு உரிமை கிடையாது.
https://youtu.be/8uzwel6m_KA
3. 20.12.2004 க்கு முன்பு ஒரு சொத்தானது பாகப்பிரிவினை செய்யப்பட்டு இருந்தால் அந்த சொத்தில் உரிமை கேட்க மகளுக்கு உரிமை கிடையாது என்பதை "வினிதா ஷர்மா vs ராகேஷ் சர்மா" என்ற வழக்கின் மூலமாக தீர்ப்பு வழங்கப்பட்டது.
மேற்சொன்ன மூன்று சூழ்நிலைகளில் ஏதாவது ஒன்று இருக்கும் பட்சத்தில் ஒரு மகள் தன்னுடைய தந்தை அல்லது தாயினுடைய சொத்தில் உரிமை கேட்டு வழக்கு தொடரவோ, சட்டப்படி போகவோ முடியாது.
"VINEETHA SHARMA VS RAKESH SHARMA"