என்ன கவி பாடினாலும்..| ஸ்ரீ ஆதித்யா ரமேஷ் | ஆலங்குடி ராதாகல்யாணம் |
விருத்தம்:
நீலச் சிகண்டியில் ஏறும் பிரான் எந்தநேரத்திலும்
கோலக் குறத்தியுடன் வருவான் குருநாதன் சொன்ன
சீலத்தை மெள்ளத் தெளிந்து அறிவார் சிவயோகிகளே
காலத்தை வென்று இருப்பார்; மரிப்பார் வெறும் கர்மிகளே.
பல்லவி:
என்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இரங்கவில்லை
இன்னும் என்ன சோதனையா முருகா (என்ன கவி)
(அனுபல்லவி)
அன்னையும் அறியவில்லை
தந்தையோ நினைப்பதில்லை
மாமனோ பார்ப்பதில்லை
மாமியோ கேட்பதில்லை (என்ன கவி)
சரணம்:
அக்ஷரலக்ஷம் தந்த அண்ணல் போஜ ராஜன் இல்லை
பாசமுடனே அழைத்து பரிசளிக்க யாரும் இல்லை
இக்ஷணத்தில் நீ நினைத்தால் எனக்கோர் குறையுமில்லை
லக்ஷியமோ உனக்கு உன்னை நான் விடுவதில்லை
கோபுரத்தின் உச்சியிலே என்குரலும் கேட்கலையோ
கோவிலினின் சன்னதியில் என்குரலும் கேட்கலையோ
ஆலயமணி ஓசையிலே என்குரலும் கேட்கலையோ
கந்தா உன் காலடியில் எனக்கு மட்டும் இடமில்லையோ
வேல் முருகா வேல்முருகா வடிவேல் முருகா
வேல் முருகா வேல்முருகா வடிவேல் முருகா..
மயிலாடும் அழகினிலே மெய்மறந்து நின்றாயோ
பக்தராடும் காவடியில் மனம் நெகிழ்ந்து போனாயோ
பக்தர்களின் கோஷத்திலே மெய்மறந்து நின்றாயோ
நானும் இங்கு கதறுகிறேன் என் குரலும் கேட்கலயோ
உன் நாமம் கதறுகிறேன் என் குரலும் கேட்கலயோ
வேல் முருகா வேல்முருகா வடிவேல் முருகா
வேல் முருகா வேல்முருகா வடிவேல் முருகா..
Alangudi Namasankeerthana Trust
rkraman -9444922848
https://youtu.be/_43blBQfzRI
--------------------------------------------------------------------------------------------------------------------
Radhe Krishna! Alangudi Radhakalyanam 2022 by Alangudi Namasankeerthana Trust, Alangudi (Gurusthalam), Thiruvarur District. 75th year (Diamond Jubliee Year) celebration of Radhakalyana Mahotsavam was from 10/02/2022 to 13/02/2022.
Enna Kavi Padinalum - Gopurathu Uchiyile - Sri Shanmugha Dhyanam - Namasankeerthanam by Chennai Sri Adhithya Ramesh Bhagavathar
Website - http://www.sriradhakalyanam.org
E-Mail Us : alangudi@sriradhakalyanam.org
Facebook - https://www.facebook.com/alangudi1947
Youtube Channel - https://www.youtube.com/rkraman
You may provide us your feedback through WhatsApp/phone call (+91 - 9444922848).
#Namasankeerthanam #Namsankirtan #Radhakalyanam #AlangudiNamasankeerthanaTrust #bhajan #gurusthalam #Bhagavathar #Bagavathar #namaprachar #bajan #chennai #AdhithyaRameshBhagavathar