1. இறுக்கம் இரத்தின முதலியார்க்கு வரைந்தவை:
அடிகள் இறுக்கம் இரத்தின முதலியார்க்கு வரைந்த 37 திருமுகங்களை முதன் முதலாகத் தமது பதிப்பில் ஆ.பா. வெளியிட்டிருக்கிறார். இப்பதிப்பில் 38 திருமுகங்கள் இடம்பெறுகின்றன. ஆ.பா பதிப்பில் திருமுகக் குறிப்புகள் என்ற தலைப்பில் முதற் குறிப்பாக உள்ள “பற்ற வேண்டியவை” என்பது இரத்தின முதலியார்க்கு வரைந்த ஒரு திருமுகத்தின் பகுதி. அத்திருமுகம் முழுவதையும் இடையில் (இடையில் சில வரிகள் நீங்கலாக) ஏழாவது திருமுகமாகச் “சாதுக்கள் சார்பு” என்ற தலைப்புடன் அதற்குரிய இடத்தில் சேர்த்திருப்பதால் இப்பதிப்பில் இஇ. முதலியார்க்கு வரைந்த திருமுகங்கள் 38 ஆயின. 38 திருமுகங்களுக்கும் அடிகள் கைப்பட எழுதியருளிய மூலங்களே ஆதாரம். இவையனைத்தையும் யாம் பார்த்திருக்கிறோம். பார்த்ததன் பயனாக முற்பதிப்பின் எழுத்துப் பிழைகள் சில திருந்தின. குறைகள் சில நிரம்பின. 6,8,24,29 ஆகிய நான்கு திருமுகங்களின், அடிகள் திருக்கரஞ் சாத்திய மூலவடிவம் இப்பதிப்பில் அச்சிடப் பெற்றுள்ளது. Download all Thiruarutpa Urainadai Audios MP3 Books in https://sanmarkkam.com/