சுய வேலைவாய்ப்பு நோக்கத்தில், கால்நடை பராமரிப்புத் துறை மூலம் செயற்கை முறை கருவூட்டல் பயிற்சி பெற இளைஞர்ளுக்கு அழைப்பு விடுத்துள்ளார் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மு. செங்கோட்டையன்.
இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன், கால்நடை பராமரிப்புத் துறை மூலம் செயற்கை முறை கருவூட்டல் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் நபர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, இரு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு 3 மாத பயிற்சியும், பயிற்சி முடித்தபின் கருவூட்டல் உபகரணங்களும் அரசு மூலம் வழங்கப்படும். பயிற்சி காலத்தில் ஊக்கத்தொகை வழங்கப்படும். பயிற்சி முடித்த நபர்கள் அரசு கருவூட்டல் நிலையங்கள் இல்லாத கிராமங்களில், அரசு நிர்ணயித்த கட்டணத்தில் கருவூட்டல் பணி மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
இயற்க்கை விவசாயம், கால்நடைவளர்ப்போர் மட்டும் இக்குழுவில் இணையவும் இது எங்கள் அதிகாரபூர்வ வாட்ஸ்அப் குழு: https://chat.whatsapp.com/G3SXkAKOwxsLE3lBkwFeyB
Telegram டெலிகிராம்: @Vithaigaliyakkam
save dairy farms: 8807671279