எழுத்தாளர் அம்பை கவனத்திற்குரிய பெண் எழுத்தாளர். தொடர்ந்து பெண் உள்ளநிலை, ஆண் அதிகார எதிர்ப்பு, பெண் வாழ்வியல் குறித்து தொடர்ந்து எழுதி வருகிறார். இவர் பல விருதுகள் பெற்றாலும் 2021 இல் சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை என்ற சிறுகதைத் தொகுப்பிற்குக் கிடைத்த சாகித்ய அகாதமி விருது அவருக்குப் பெரிய அங்கீகாரத்தை அளித்தது எனலாம். இத்தொகுப்பில் 13 கதைகள் உள்ளன. ஒவ்வொன்றும் வெவ்வேறு மனநிலையை உணர வைக்கின்றன. வீழ்தல் என்ற கதை ஒரு பெண்ணின் தற்கொலை மனநிலையைப் பேசுகிறது. அதற்கான காரணமும் கதையில் சுட்டப்படுள்ளன. பெண் என்பவள் ஆண்களுக்கு முதுகெலும்பு போன்றவள். அவள் ஆண்களையும் பாதுகாக்கக் கூடியவள். முதுமை கொண்டாடப்பட வேண்டியது. அவர்களைப் புறக்கணிப்பது சமூகத்திற்கு ஏற்றதல்ல... என்று பல விவாதங்களை முன்வைக்கிறது இவரது கதை... கட்டாயம் மீதிக்கதைகளையும் வாய்ப்பிருப்பின் வாசியுங்கள்.... அம்பை சமகாலத்தில் வாசிக்கப்பட வேண்டிய மிக முக்கியமான எழுத்தாளர். சாகித்ய அகாதமி விருதுப் பட்டியலில் நான்காவது பெண்ணாக அடையாளப்பட்டிருக்கிறார்... தொடர்ந்து இவர் எழுத வேண்டும்....