தென்னாடு சைவ மாணவர் சபை நடாத்திய மார்கழிப் பெருவிழா - 2024
காலை அரங்கம் - தில்லைக்கூத்தன் திருவம்பலம்
அருளுரை - பழனி ஆதீன குருமகாசந்நிதானம் | தவத்திரு. சாது சண்முக அடிகளார்
பழனியில் ஆறுகால வழிபாடுகளும் தெய்வத்தமிழில் தான் இடம்பெறுகிறது. மொழி வழிபாட்டிற்கு தடையல்ல. எல்லாம் கடந்தவன் இறைவன். எல்லாம் தெரிந்தவன் இறைவன். தாய்மொழியில் நிகழ்த்தும் வழிபாடே மேன்மையானது. திருமுறையே கருவூலம் என்ற கருத்துக்களை வழங்கியதோடு, மேலும் "தொடங்குவது எளிது தொடர்வது அரிது" என்ற கூற்றை பொய்யாக்கி தென்னாடு சிறப்பாக இயங்க வேண்டும் என்று அருளாசி வழங்கி, வருடாவருடம் பழனி ஆதினம் சார்பாக மார்கழிப் பெருவிழாவிற்கு 200 வேட்டிகள் தந்து உதவுவதாக பெருவாக்கையும் அருளிச் செய்தார்.