தமிழ்ப்படைப்புலகில் தீவிரமான இலக்கியப் படைப்புகளைத் தந்து, அப்படைப்பகளால் இவ்வாழ்வுக்கு நேர்மறைக்கோணம் அளிக்கும் முன்னோடி இலக்கிய ஆளுமைகளை மனமேந்தும் வாய்ப்பாகவும், சமகால இளம் வாசிப்பு மனங்களுக்கு அவ்வெழுத்தாளர்களை இன்னும் அணுக்கப்படுத்தும் செயலசைவாகவும் ‘தன்னறம் இலக்கிய விருது’ ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இதுவரையில் எழுத்தாளர் யூமா வாசுகி (2020) , எழுத்தாளர் தேவிபாரதி (2021), எழுத்தாளர் சு.வேணுகோபால் (2022), எழுத்தாளர் பாலைநிலவன் (2024) ஆகிய ஆளுமைகளுக்கு இவ்விருது அளிக்கப்பட்டுள்ளது.
அதன்நீட்சியாக, 2024ம் ஆண்டுக்கான 'தன்னறம் இலக்கிய விருது' எழுத்தாளர் ஷோபாசக்தி அவர்களுக்கு அளிக்கப்படுகிறது.
கொரில்லா, ம், Box, இச்சா, ஸ்லாம் அலைக் உள்ளிட்ட நாவல்கள், தேசத்துரோகி, எம்.ஜி.ஆர் கொலைவழக்கு, கண்டிவீரன், கருங்குயில் உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்புகள், மேலும் பல்வேறு கட்டுரைத் தொகுப்புகள், நேர்காணல்கள், அரசியலாக்கங்கள், நாடகங்கள், திரைக்கதைகள், நடிப்பு, பதிப்பு என படைப்பூக்கம் கொண்ட மனிதராக தனது சுயத்தைத் தொடர்பவர் ஷோபாசக்தி.
தனது கூரிய படைப்புகளால் தமிழ் இலக்கியத்தின் செறிவுப்பாதையை நீட்சிப்படுத்திய படைப்பாளுமை ஷோபாசக்தி அவர்களுக்கு தன்னறம் விருது சென்றடைவதில் மகிழ்வும் நிறைவும் கொள்கிறோம்.
~
நன்றியுடன்,
தன்னறம் நூல்வெளி
www.thannaram.in
****
Song: Undertow
Composer: Scott Buckley
Website: https://youtube.com/user/musicbyscottb
License: Free To Use YouTube license youtube-free
Music powered by BreakingCopyright: https://breakingcopyright.com