MENU

Fun & Interesting

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயில் | 21 தலைமுறை பித்ரு சாபம் நீக்கும் தலம் | நவக்கிரக புதன் தலம்

Video Not Working? Fix It Now

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயில் தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரையில் அமைந்துள்ள இத்தலம் பதினொன்றாவது தலமாகப் போற்றப் படுகிறது. 51 சக்தி பீடங்களில் பிரணவ பீடம். நவக்கிரக ஸ்தலங்களில் திருவெண்காடு புதன் ஸ்தலமாக விளங்குகிறது. மூலவர்: சுவேதாரன்யேஸ்வரர், வெண்காட்டுநாதர். அம்பாள்: பிரம்மவித்யா நாயகி தல விருட்சம்: வட ஆலமரம். தல தீர்த்தம்: சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம் என, முக்குள தீர்த்தங்கள். (இந்த மூன்று தீர்த்தங்களும் வெளிப்பிரகாரத்தில் இருக்கின்றன.) ஊர்: திருவெண்காடு மாவட்டம்: மயிலாடுதுறை காவிரிக் கரையில் உள்ள ஆறு சிவஸ்தலங்கள் காசிக்கு சமமாக விளங்குகின்றன. அவற்றில் திருவெண்காடான இத்தலமும் ஒன்றாகும். பிற; 1. திருவையாறு, 2. திருசாய்க்காடு (சாயாவனம்), 3. திருவிடைமருதூர், 4. திருவாஞ்சியம் மற்றும் 5. மயிலாடுதுறை. #தலவரலாறு சலந்தரன் மகன் மருத்துவன். பிரம்மனிடம் வரம் பெற்ற மருத்துவன் என்ற அசுரன் தேவர்களுக்கு துன்பம் செய்தான். சிவபெருமான் அருளியபடி தேவர்கள் வேற்றுருவில் திருவெண் காட்டில் வாழ்ந்து வந்தனர். அசுரன் திருவெண்காட்டிற்கு வந்து தேவர்களோடு போர் செய்தான்.அசுரன் சிவனை நோக்கி தவம் இருந்து சூலாயுதம் பெற்று நந்தி தேவரை சூலத்தால் தாக்கி காயப்படுத்தினான். மருத்துவன் மாயச் சூலத்தை அவர்மீது ஏவ,அச்சூலம் நந்தியின் உடலை ஒன்பது இடங்களில் துளைத்துவிட்டுப் போயிற்று. நந்தி தேவர் சிவனிடம் முறையிட சிவன் கோபம் கொண்டார்.அப்பொழுது அவருடைய ஐந்து முகங்களில் ஒன்றான ஈசான்ய முகத்தினின்று அகோர மூர்த்தி தோன்றினார். இந்த அகோர உருவை கண்ட மாத்திரத்திலேயே அசுரன் சிவனிடம் சரணாகதி அடைந்து வணங்கினான். சரணடைந்த அசுரன் அகோர மூர்த்தியின் காலடியிலும்,காயம் பட்ட நந்தி தேவர் சுவேதாரண்யவரர் சுவாமி நிறுத்த மண்டபத்திலும் இன்றும் காணலாம். இவ்வரலாற்றையொட்டிச் சுவாமிக்கு எதிரில் வெளியே உள்ள நந்தியின் உடம்பில் ஒன்பது துவாரங்கள் இருப்பதை இன்றும் காணலாம். நவக்கிரகதலத்தில் இது புதன் தலமாகும். காசியில் விஷ்ணு பாதம் உள்ளது போல இங்கு ருத்ர பாதம் வடவால் விருட்சத்தின் கீழ் உள்ளது. #பிரம்மவித்யாம்பிக்கை_அம்மன் இங்கு வழிபட்ட பிரமனுக்கு அம்பாள் வித்தையை உபதேசித்தாள்.ஆதலின் அம்பாளுக்கு பிரமவித்யாம்பிகை என்று பெயர் வந்தது. இங்குள்ள பிரம்மவித்யா தேவியை வழிபட்டு வித்தைகளில் சிறக்கலாம். ஸ்ரீவித்யா உபாசகர்கள் அன்புடன் வணங்கும் தேவி. #பொது_தகவல் இத்தலம் புதன் கிரகம் உரியவர்கள் வழிபடவேண்டிய சிறப்புத் தலமாகும். புதன் சந்நிதிக்குப் பக்கத்தில் முள் இல்லாத வில்வமரம் உள்ளது. இத்தலத்தில் சந்திரன் வழிபட்ட லிங்கம் உள்ளது. அகோரமூர்த்தியின் மூல மற்றும் உற்சவ திருமேனிகள் அற்புத வேலைபாடுகளோடு அமைந்துள்ளன; காணத்தெவிட்டாத கலையழகு. நடராசசபை தில்லையைப் போலச் செப்பறையில் அமைந்துள்ளது; உள்ளே உள்ள ஸ்படிக லிங்கத்திற்கு தில்லையைப் போலவே நாடொறும் அபிஷேகம் நடைபெறுகிறது. துர்க்கை இங்கு மேற்கு நோக்கியிருப்பது விசேஷமானது. திருமணமாகாதோர் இச்சந்நிதியில் பிரார்த்தனை செய்து கொள்வது மரபாக இருந்து வருகின்றது. மூலவர் உட்புறச் சுவரில் தலப்பதிக கல்வெட்டுகள் உள்ளன. சுமார் 12 ஏக்கர் நிலப்பரப்பில் இந்தக் கோவில் அமைந்திருக்கிறது. கோவிலைச் சுற்றி நான்கு தேரோடும் வீதிகள் உள்ளன. கோவில் உள்ளே நான்கு பிரகாரங்கள் இருக்கின்றன. இந்த ஆலயத்திற்கு கிழக்கிலும் மேற்கிலும் இராஜ கோபுரங்கள் உண்டு. வெளிப் பிரகாரத்திலிருந்து உள்ளே செல்ல இரு கூடகோபுரங்கள் இருக்கின்றன. சூரியனும் சந்திரனும் இங்குள்ள மூலவரை வழிபட்டுள்ளனர். ஆதிசிதம்பரம் என்ற பெயரும் பெருமையும் திருவெண்காடு ஸ்தலத்திற்கு உண்டு. மூலவர் சுயம்பு வடிவானவர். இங்கும் சிதம்பரம் போன்றே நடராஜர் சபை, ஸ்படிக லிங்கம், ரகசியம் அமைந்துள்ளது. ஸ்படிக லிங்கத்திற்கு தினமும் 4 முறை அபிஷேகமும் நடராஜருக்கு வருடத்திற்கு 6 முறையும் அபிஷேகம் நடைபெறுகின்றன. இத்தலத்தில் உள்ள துர்க்கை சந்நிதியும், காளி சந்நிதியும் மிகவும் பிரசித்தி பெற்றவை. துர்க்கை அம்மனின் உருவச் சிற்பமும், காளிதேவியின் உருவச் சிற்பமும் மிகுந்த கலை அழகுடன் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும். அதே போன்று இங்குள்ள நடராஜ மூர்த்தியும் மிகுந்த கலை அழகு கொண்டது. சிதம்பரத்தில் உள்ளதைப் போன்றே இங்கும் நடராஜர் சபைக்கு அருகில் மஹாவிஷ்னுவின் சந்நிதி இருக்கிறது. இங்குள்ள அகோரமூர்த்தி இந்த ஆலயத்தின் தனிச் சிறப்பு பெற்றவர். #நவக்கிரஹ_ஸ்தலம்: திருவெண்காடு நவக்கிரஹங்களில் புதனுக்கு உரிய ஸ்தலமாகும். அம்பாள் பிரம்ம வித்யா நாயகியின் கோவிலுக்கு இடது பக்கத்தில் தனி சந்நிதியில் புத பகவான் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். புதனின் தந்தையான சந்திரனின் சந்நிதியும், சந்திர புஷ்கரணி தீர்த்தமும் புதன் சன்னதிக்கு எதிரில் அமைந்துள்ளது. #பிராத்தனை புத பகவானை வழிபட்டால் உடலில் உள்ள நரம்பு சம்பந்தமான நோய்கள் நீங்குதல், கல்வி மேன்மை, நா வன்மை, செய்யும் தொழில் சிறப்பு ஆகிய நலன்கள் உண்டாகும். #அமைவிடம் சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் வழியில் திருவெண்காடு அமைந்துள்ளது. சீர்காழியில் இருந்து பேருந்து வசதி உள்ளது. கோயில் Google map link https://maps.app.goo.gl/bGRgmAMf4e2Qjv8m7 ஆலய அர்ச்சகர் தொலைபேசி எண் +91 8098741025 மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் +91 7994347966 திருமழப்பாடி வைத்தியநாதர் கோயில் தரிசனம் https://youtu.be/fqzMOyxUHsA?si=r7Kkapou7kyWgyX4 if you want to support us via Google pay phone pay paytm 9655896987 Join this channel to get access to perks: https://www.youtube.com/channel/UCv4F_mJmuC7-bA9B0v20B5w/join Join Our Channel WhatsApp Group https://chat.whatsapp.com/LRPxBQMNHRAGAJPNwzCB04 - தமிழ்

Comment