தினம் ஓர் சிந்தனை 30.05.24
தற்கால சூழ்நிலையில் முஸ்லிம் சமூகத்திற்கு அல்லாஹ் கூறும் உபதேசங்கள்.
சூரா ஹுத் 112 முதல் 117 ஆயத் வரை.
5 உபதேசங்கள்.
1. எல்லா நிலையிலும் உறுதியாக இருங்கள். فاستقم
2. அல்லாஹ்வின் கட்டளைகளில் வரம்பு மீறாதீர்கள். ولا تطغوا
3. தீமையின் பக்கம் சாய்ந்து விடாதீர்கள். ولا تركنوا
4. தொழுகையை தொடர்ந்து நிலை நாட்டுங்கள். واقم الصلوة
5. எல்லா நிலையிலும் பொறுமையாக இருங்கள். واصبر
(நபியே!) ஓர் ஊராரில் சிலர் (மற்றவர்களைப் பாவம் செய்யாது) சீர்திருத்திக் கொண்டிருக்கும் வரை (மற்ற) சிலரின் அநியாயத்திற்காக அவ்வூரார் அனைவரையும் உமது இறைவன் அழித்துவிட மாட்டான்.
அல்குர்ஆன் 11:117