MENU

Fun & Interesting

மாதாவுக்கு 33-நாள் அர்ப்பணம் ஜெபம் DAY18 #tamilbiblewisdom

Tamil Bible Wisdom 2,444 21 hours ago
Video Not Working? Fix It Now

Whatsapp Link- https://chat.whatsapp.com/D7p2fHusH8627VRsEGuhbN Join this channel to get access to perks: https://www.youtube.com/channel/UCWI_F4rB9wPGNnyOdhBQ10g/join CHRIST THE REDEEMER CHANNEL - https://www.youtube.com/channel/UCIBGpCrAJeqzmpp4fwMfXTQ 1-ம் நாள் அர்ப்பணம் துவக்க ஜெபம்: ஆண்டவரே! உமது பரிசுத்த ஆவியின் தூண்டுதலால் எங்கள் கிரியைகளுக்கு முன் செல்வீராக. உமது வரப்பிரசாத உதவியால் அவைகளை நீரே முற்றுப்பெறச் செய்வீராக. இதனால் எங்களின் சகல ஜெபங்களும் ஞானக் கிரியைகளும் உம்மால் தொடங்கப்பட்டு உம்மாலேயே முடிவடையக்கடவன. எங்கள் ஆண்டவராகிய சேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே. ஆமென். தேவ சம்பந்தமான புண்ணியங்களைக் கேட்டு மன்றாடுவோமாக. விசுவாசம்: என் சர்வேசுரா சுவாமி! திருச்சபை விசுவசித்துக் கற்பிக்கிற சத்தியங்களையெல்லாம் தேவரீர் தாமே அறிவித்திருப்பதினால் நானும் உறுதியாக விசுவசிக்கிறேன். ஆமென். நம்பிக்கை: என் சர்வேசுராசுவாமி! தேவரீர் வார்த்தைப்பாடு கொடுத்திருக்கிறபடியினால், சேசுநாதர் சுவாமி பாடுபட்டுச் சிந்தின திரு இரத்தப் பலன்களைப் பார்த்து என் பாவங்களையெல்லாம் பொறுத்து, எனக்கு உம்முடைய வரப்பிரசாதங்களையும் மோட்ச பாக்கியத்தையும் தந்தருளுவீரென்று முழுமனதோடு நம்பியிருக்கிறேன். ஆமென். தேவ சிநேகம்: என் சர்வேசுராசுவாமி! தேவரீர் மட்டில்லாத சிநேகத்துக்குப் பாத்திரமாயிருக்கிறதினாலே எல்லாவற்றிக்கும் மேலாக உம்மை நான் முழுமனதோடு சிநேகிக்கிறேன். மேலும் உம்மைப் பற்றி என்னை நான் நேசிக்கிறது போல மற்றெல்லாரையும் நேசிக்கிறேன். ஆமென். மாதாவுக்குப் பாத்திமா அர்ப்பண ஜெபம்: எங்கள் அன்புத் தாயும் அரசியுமான மரியாயே! ரஷ்யாவை மனந்திருப்பி உலக மக்களுக்கு சமாதானம் தருவேனென்று பாத்திமாவில் வாக்களித்தீரே. எங்களுடையவும் உலகத்தினுடையவும் பாவங்களால் உமது மாசற்ற இருதயத்துக்கு நேர்ந்த சகல நிந்தை அவமான துரோகங்களுக்குப் பரிகாரமாக, எங்களுக்கு வருகிற துன்பங்களைப் பரித்தியாகமாக ஏற்றுக் கொள்கிறோம். ஐம்பத்து மூன்று மணி ஜெபமாலையை தியானித்துச் சொல்வோம். எங்களை உம்முடைய மாசற்ற இருதயத்துக்கு ஒப்புக் கொடுக்கிறோம். அதன் அடையாளமான கார்மெல் உத்தரியம் அணிகிறோம். இவ்வர்ப்பணத்தை அடிக்கடி விசேஷமாய் சோதனை நேரத்தில் புதுப்பிப்போம் தாயே ஆமென். 1 அருள் நிறைந்த... (மாதாவுக்கு நாம் செய்யும் இவ்வர்ப்பணத்தின் அடையாளம் கார்மெல் உத்தரியம் அணிந்திருத்தலாகும். உத்தரிய சாலையில் சேர்ந்து அதை அணிவோமாக) ஞானஸ்நான வார்த்தைப்பாட்டை புதுப்பித்தல்: நான் என் ஞானஸ்நானத்தில் அனைவருக்கும் கொடுத்த வார்த்தைப்பாடுகளை அவர் முன்பாக புதுப்பித்துக் கொள்கிறேன். பசாசையும் அவன் கிரியைகளையும் அவன் ஆரவாரங்களையும் முழு மனதோடு விட்டுவிடுகிறேன். பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்த எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனை விசுவசிக்கிறேன். அவருடைய ஏக சுதனாகிய நம்முடைய நாதர் ஏசு கிறிஸ்து மனிதனாகப் பிறந்தாரென்றும் நமக்காகப் பாடுபட்டார் என்றும் விசுவசிக்கிறேன். பரிசுத்த ஆவியையும், பரிசுத்த கத்தோலிக்க அப்போஸ்தலிக்கத் திருச்சபையையும் அர்ச்சிஷ்டவர்களுடைய சமூக பிரயோசனத்தையும் பாவ பொறுத்தலையும், சரீர உத்தானத்தையும், நித்திய சீவியத்தையும் விசுவசிக்கிறேன். மாதாவுக்கு அடிமை சாசனம்: சகல மோட்சவாசிகளுக்கு முன், கடவுளின் கன்னித் தாயான அமலோற்பவ மரியாயே உம்மை என் அன்னையாகவும் ஆண்டவளாகவும் தெரிந்து கொள்கிறேன். உமது அடிமையாக என் சரீரத்தையும் ஆத்துமத்தையும், என் உள் எண்ணங்களையும் ஐம்புலன்களையும் என் எல்லாவற்றையும் என் ஜீவிய கால முழுவதும் நான் செய்யும் நற்கிரியைகளையும் பலன்களையும் உம்மிடம் ஒப்படைக்கிறேன். இப்பொழுதும் எப்பொழுதும் கடவுளின் அதிமிக தோத்திரத்துக்காக உமது பிரியப்படி நீரே முழு உரிமையுடன் என்னை ஆண்டு நடத்த கையளிக்கிறேன். ஆமென். மரியாயின் மாசற்ற இருதயமே என் இரட்சண்யமாயிரும். (மும்முறை) பரிசுத்த ஆவிக்கு ஜெபம்: பரிசுத்த ஆவியே! தேவரீர் எழுந்தருளி வாரும். பரலோகத்திலிருந்து உம்முடைய திவ்ய பிரகாசத்தின் கதிர்களை வரவிடும். தரித்திரருடைய பிதாவே, கொடைகளைக் கொடுக்கிறவரே, இருதயங்களின் பிரகாசமே எழுந்தருளி வாரும். உத்தம ஆறுதலானவரே! ஆத்துமங்களுக்கு மதுரமான விருந்தாடியே! பேரின்பரசமுள்ள இளைப்பாற்றியே! பிரயாசத்தில் சுகமே, வெயிலிற் குளிர்ச்சியே. அழுகையில் தேற்றரவே எழுந்தருளி வாரும். வெகு ஆனந்தத்தோடு கூடியிருக்கிற பிரகாசமே, உம்முடைய விசுவாசிகளின் இருதயத்தின் உற்பனங்களை நிரப்பும். உம்முடைய தெய்வீகமின்றியே மனிதரிடத்தில் குற்ற மில்லாதது ஒன்றுமில்லை. அசுத்தமாயிருக்கிறதைச் சுத்தம் பண்ணும். உலர்ந்ததை நனையும். நோவாயிருக்கிறதைக் குணமாக்கும். வணங்காததை வணங்கப் பண்ணும். குளிரோடிருக் கிறதைக் குளிர் போக்கும். தவறினதைச் செம்மையாய் நடத்தும். உம்மை நம்பின் உம்முடைய விசுவாசிகளுக்கு உம்முடைய திருக்கொடைகள் ஏழையும் கொடுத்தருளும். புண்ணியத்தின் பேறுகளையும் நல்ல மரணத்தையும் நித்திய மோட்ச ஆனந்தத்தையும் எங்களுக்குத் தந்தருளும் சுவாமி . ஆமென். சமுத்திரத்தின் நட்சத்திரமே: 1. சமுத்திரத்தின் நட்சத்திரமே வாழ்க! கடவுளின் கருணையுள்ள தாயே! எப்பொழுதும் கன்னிகையே! மோட்சத்தின் இனிய வாசலே வாழ்க! 2. கபிரியேல் தூதன் உரைத்த, மங்கள் வாழ்த்துரையை ஏற்று, ஏவையின் பெயரை மாற்றிய தாயே! சமாதானத்தில் எங்களை நிலை நிறுத்துவீராக. 3. குற்றவாளிகளின் பாவ விலங்கை அறுப்பீராக. பாவ இருளில் உள்ளோருக்கு ஒளியருள்வீராக. எங்கள் எல்லா தீமைகளையும் நீக்கி நலன் அனைத்திற்காகவும் மன்றாடுவீராக. 4. தாயென்று உம்மைக் காட்டும் எங்களுக்காக உமது மகவாகப் பிறந்த தேவசுதன் உம் மன்றாட்டின் மூலம் எங்கள் வேண்டுதலை ஏற்பாராக. 5. கன்னியருள் சிறந்த கன்னிகையே! அனைவரிலும் மிக சாந்தமுள்ள அன்னையே! எங்கள் பாவங்களிலிருந்து எங்களை விடுவியும்; சாந்தமும் கற்பும் உள்ளவர்களாக்கும்.

Comment