அற்புதத் திருவந்தாதி 36-41, Arputha Thiruvanthathi, Mr. Sivadeeban
Arputha Thiruvanthathi - அற்புதத் திருவந்தாதி 36-41,
மறுவுடைய கண்டத்தீர் வார்சடைமேல் நாகம்
தெறுமென்று தேய்ந்துழலும் ஆஆ - உறுவான்
தளரமீ தோடுமேல் தான்அதனை அஞ்சி
வளருமோ பிள்ளை மதி-36
மதியா அடலவுணர் மாமதில்மூண் றட்ட
மதியார் வளர்சடையி னானை - மதியாலே
என்பாக்கை யாலிகழா தேத்துவரேல் இவ்வுலகில்
என்பாக்கை யாய்ப்பிறவார் ஈண்டு-37
ஈண்டொளிசேர் வானத் தெழுமதியை வாளரவம்
தீண்டச் சிறுகியதே போலாதே - பூண்டதோர்
தாரேறு பாம்புடையான் மார்பில் தழைந்திலங்கு
கூரேறு காரேனக் கொம்பு-38
கொம்பினைஓர் பாகத்துக் கொண்ட குழகன்தன்
அம்பவள மேனி அதுமுன்னஞ் - செம்பொன்
அணிவரையே போலும் பொடியணிந்தால் வெள்ளி
மணிவரையே போலும் மறித்து-39
மறித்து மடநெஞ்சே வாயாலுஞ் சொல்லிக்
குறித்துத் தொழுதொண்டர் பாதம் - குறித்தொருவர்
கொள்ளாத திங்கள் குறுங்கண்ணி கொண்டார்மாட்
டுள்ளாதார் கூட்டம் ஒருவு-40
ஒருபால் உலகளந்த மாலவனாம் மற்றை
ஒருபால் உமையவளாம் என்றால் - இருபாலும்
நின்னுருவ மாக நிறந்தெரிய மாட்டோமால்
நின்னுருவோ மின்னுருவோ நேர்ந்து-41
#அற்புதத்திருவந்தாதி #arputhathiruvanthathi #காரைக்கால்அம்மையார் #karaikalammaiyar #63nayanmars #காரைக்கால் #பெண்நாயன்மார்கள் #பெண்நாயன்மார் #சிவதீபன் #saivasamayam #saivasithantham #சைவசமயம் #திருமுறை #பேயார் #பெரியபுராணம் #சைவசித்தாந்தம் #தருமைஆதீனம் #dharmapuraadhinam #gvijayan #sivadeeban #adheenam #ஆதீனம் #விஜயன்
Check all the videos on the playlist:
.
.
For business inquiry: [email protected]
.
CLICK "SUBSCRIBE" 🔥 button and click on "BELL" icon 🔔 to get instant notification of latest uploads in your mobile.
Be the first person to view the latest video 🎬,
Subscribe to VIJAYAN YouTube channel: http://bit.ly/VIJAYANSUBSCRIBE
Join this channel to get access to perks:
https://www.youtube.com/channel/UCmJJk_Dr6Gk_tE2iHx43Otg/join
Follow me on Youtube 📽️
►► http://bit.ly/VIJAYANYOUTUBE
Follow me on Facebook 👍
►► http://bit.ly/VIJAYANFB
Follow me on Twitter 💙
►► http://bit.ly/VIJAYANTWEETS