ayyavazhi# akila#
அய்யாவின் அன்புகொடி மக்களுக்கு அன்பான வணக்கங்கள், அய்யா வைகுண்டர், இறைவன் கலி யுகத்தை அழித்து தர்ம யுகத்தை மலரச்செய்ய எடுத்த மனு அவதாரம்.
உலகாளும் இறைவன் ஆதிமூலப் பரம்பொருள் 1008 ஆம் ஆண்டு மாசி திங்கள் 20ம் நாள் திருச்செந்தூர் கடலுக்குள் முப்பொருள் ஒன்றாகி (சிவன், விஷ்ணு, பிரம்மா) அய்யா வைகுண்ட பரம்பொருளாக விஞ்சை பெற்று அம்மை சரஸ்வதி தேவி தாலாட்ட, தேவர்கள் மலர்த்தூவ, வானவர்கள் வணங்கி நிற்க அகிலத்தின் ஜோதி அய்யா வைகுண்டர் அவதாரம் நிகழ்ந்தது