தமிழ்நாட்டில் கொங்கு நாடு, சிறப்பு மிக்க மண்டலம் ஆகும். கொங்கு தேசத்தின் மொழி, கலை ,பண்பாடு பழக்கவழக்கங்கள் எல்லோராலும் போற்றப்படக்கூடியது. கலை ,நம் சமூகத்தின் பண்பாட்டையும் உணர்வுகளையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்லும் அற்புதமான மொழி.
கொங்கு கலைகளில் கும்மிக்கலை பழமையான ஒன்றாகும். நம் முன்னோர்கள், கொண்டாட்டங்கள், திருவிழாக்கள் ,மற்றும் அறுவடை காலங்களில் குளவி போட்டு கும்மி அடித்து கொண்டாடி மகிழ்ந்தனர் .
அத்தகைய சிறப்புமிக்க நம் கும்மி கலையை தமிழ் மனம் விருது பெற்ற பவளக்கொடி கும்மியாட்டக் குழு உலகெங்கும் எடுத்துச் சொல்லும் பெரும் முயற்சியில் மக்களுக்கு பயிற்சி அளித்து அரங்கேற்றங்களை நிகழ்த்தி வருகின்றனர்.
அவர்களின் 47வது அரங்கேற்ற நிகழ்வு அன்னூரில் நடைபெற்றது .
மூத்த ஆசிரியர்களான அருணாச்சலம் ஐயா, விஸ்வநாதன் அண்ணா, மணி அண்ணா, ஆகியோரின் வழிகாட்டுதலின்படி ஆசிரியர்கள் பேபி பாலனும், ஹரிஷ் பாலனும் அன்னூர் செந்தூர் கார்ட்ஸ் குழுவிற்கு மூன்று மாதங்கள் தொடர்ந்து பயிற்சி அளித்து 2023 ஜூலை 2 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு அன்னூர் அகிலா வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளியில் அரங்கேற்றத்தை சிறப்பாக நடத்தினர்.
கொங்கு தமிழ் பரப்பும்
அத்தி டிவி
அன்பும் அறனும்
இயக்குனர் லஹரி கிருஷ்ணா
9941100033
#BAVALAKODI #KUMMIYATTAM #SENTHURCARDS