MENU

Fun & Interesting

வாழ்க்கையை சீரழிக்கும் 😔 தள்ளிப்போடும் பழக்கத்தை ஒழிக்க 5 டெக்னிக் | STOP 🛑 Procrastination | tamil

Prime Talk Family 2,741 6 days ago
Video Not Working? Fix It Now

தள்ளிப்போடும் பழக்கத்தை, தள்ளிப்போடும் 5 சிறந்த டெக்னிக். பொதுவாக, நம் அனைவரிடமும் காணப்படும் ஒரு கெட்ட பழக்கம் இந்த தள்ளிப் போடுதல். தள்ளிப் போடுவதால் தற்சமயம் உங்களுக்கு சௌகரியம் ஏற்படலாம். ஏனெனில் உங்கள் உடலும் மனமும் விரும்புவது இதையே. உடலும் மனமும் உழைக்க விரும்பாமல் இயல்பான நிலையில் இருக்க விரும்புகிறது. இதனுடன் சோம்பலும் சேரும் பொழுது நீங்கள் வேலையை தள்ளிப் போடுகிறீர்கள். அதாவது நீங்கள் வேலையை செய்ய நினைத்தாலும், அந்த வேலையை துவங்குவதற்கு மனதின் ஒத்துழைப்பு அவசியம் தேவைப்படுகிறது. நீங்கள், வேலையை தள்ளிப் போடுவதற்கு முக்கியமான காரணம் மனம் மட்டுமே, ஏனெனில் அந்த மனம் ஆர்வமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கும் பொழுது அது வேலையை செய்கிறது. சோம்பலுக்கு உள்ளாகும் பொழுது, தள்ளிப்போடும் பழக்கத்தை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு நாளும் நீங்கள் தள்ளிப்போடும் பழக்கம், பின்னாளில் உங்களை மன உளைச்சலுக்கும் எரிச்சலுக்கும் உள்ளாக்கலாம். எனவே, அன்றைய வேலையை அன்றைக்கே செய்யுங்கள். தள்ளிப்போடும் பழக்கத்தை முற்றிலும் ஒழிக்க, உங்களது எண்ணத்தில் உறுதியாக இருக்க வேண்டும். என்ன நடந்தாலும், நினைத்த காரியத்தை முடிப்பேன் என்ற எண்ணத்தில் உறுதியாக இருக்க வேண்டும். இந்த உறுதி உங்களிடம் சோம்பல் வராமல் விரட்டும். மனதை பலப்படுத்தும். நினைத்த காரியத்தை நிறைவேற்றும். தள்ளிப் போடும் பழக்கத்திற்கு எதிர்மறை எண்ணமும் ஒரு காரணம். நம்மால் முடியுமா.? என்ற ஒரு கேள்வி. இது உங்கள் நம்பிக்கையை, மொத்தமாக அழிக்கும் தன்மை கொண்டது. எனவே எதிர்மறை எண்ணத்தை முற்றிலுமாக மனதில் இருந்து முதலில் அழியுங்கள். நம் அனைவரும் பலசாலிகளே, நம்மால் எதையும் சாதிக்க கூடிய சக்தி, நம்மிடமே உள்ளது. நம்மால் முடியும் என்பதை நாம் முதலில் நம்ப வேண்டும். தள்ளிப்படும் பழக்கத்தை தடுக்க மனதை எப்பொழுதும் சுறுசுறுப்பாக வைத்திருங்கள். இந்த சுறுசுறுப்பு நீங்கள் செய்யும் அந்த வேலையின் நேரத்தை குறைக்கும் தன்மை கொண்டது. எனவே ஒரு வேலையை துவங்கும் போது மனதின் நிலையை கவனித்து அதை சுறுசுறுப்பாகவும் ஆர்வமாகவும் மாற்றி அதன் பின்னர் வேலையை துவங்குங்கள். More videos 🗡️ கத்தியைப்போல் மூளையை 🧠 கூர்மையாக்கும் 5 டெக்னிக் | REFRESH your BRAIN with 5 best technique https://youtu.be/uOVBOVtwxhY ⌛நேரம் எங்கெல்லாம் வீணாகிறது.? சரி செய்ய புது வழி 🔥 The 5 points will save your TIME ⏰ https://youtu.be/KONqo27DvWM 🥵 எதிர்மறை எண்ணத்தை வேரோடு அழிக்க இந்த 5 Tips 🔥 தெரிஞ்சுக்கோங்க | how to destroy negative thoughts 🌚 https://youtu.be/MUVCnylNymQ துவண்ட மனதை 😔 வலிமையாக்கும் 5 ரகசியங்கள் 🔥 இனி ஊக்கம் குறையாது 💪 how to overcome your failure https://youtu.be/ikNkaD2miw0

Comment